முல்லைப் பெரியாறு கடையடைப்பு-5 மாவட்ட தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து

By Sudha

Madurai Theatre
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று நடந்த கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த மாவட்டங்களில் இன்று தியேட்டர்களில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக பேசி வருகிறது கேரள அரசு. மேலும் தமிழர்களையும், தமிழக வாகனங்களையும் தாக்கி வருகிறார்கள் அங்குள்ளவர்கள். இதையடுத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள அரசைக் கண்டித்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. மக்கள் ஆதரவுடன் நடந்த இந்த வெற்றிகரமான போராட்டத்தில் தியேட்டர்களும் பங்கேற்றன.

அதன்படி இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் அனைத்தும் தியேட்டர்களில் ரத்து செய்யபப்ட்டு தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X