மது மாது செல்பி.... இளசுகளின் மயக்கத்தை தெளியவைக்கும் தேடு

சென்னை: மது, மாது, காதல் மயக்கத்தில் கிடக்கும் இன்றைய இளைஞர்கள் திருந்தி இலக்கை அடைந்தார்களா இல்லையா என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் தேடு.

கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது.

Thedu Movie about Liquor Women and Selfie

இணைய தலைமுறை திரைப்படத்தை இயக்கிய சு.சி.ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, உறுதிகொள், வீராபுரம், ஆகிய படங்களில் நடித்த மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைக் களத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. மயக்கம் தெளிந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக் களம்.

Thedu Movie about Liquor Women and Selfie

இவர்களோடு இணைந்து சிவகாசி முருகேசன், விஜய் டிவி கலக்கப் போவது யாரு புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத, டி.ஜே.கோபிநாத் இசையமைத்து பாட, வேல்முருகன், மற்றும் பூர்ணிமாவும் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள்.

Thedu Movie about Liquor Women and Selfie

எஸ்.ஆர்.முருகன் சண்டை பயிற்சிக்கும், கம்பு முருகன் நடனத்திற்கும் பொறுப்பேற்க, வடிவமைப்பு சசி & சசி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X