இந்த போலீஸ் சூப்பரு! - 'தீரன் அதிகாரம் ஒன்று' ட்விட்டர் விமர்சனம்!
சென்னை : 'சதுரங்க வேட்டை' படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகி இருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'.
இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
'தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் ட்விட்டரில் படத்தைப் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களின் கருத்துகளைப் பார்க்கலாம்.
பக்காவான கதை
கார்த்தியோட கேரியர்ல ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் பெஸ்ட் மூவினா அது தீரன் அத்தியாயம் ஒன்றுதான் பக்காவான கதை வசனங்கள் தீயா இருக்கு சூப்பர் படம்.
மிரட்டல்
#TheeranAdhigaaramOndru மிரட்டல்!! தீரன் திருமாறன் கார்த்தி செமையா பண்ணியிருக்கார். கண்டிப்பா தமிழ்ல ஒன் ஆப் தி பெஸ்ட் போலீஸ் மூவி!
அதிகாரத்தை வென்றுவிட்டான்
தீரன் -அதிகாரம் ஒன்று அதிகாரத்தை வென்றுவிட்டான் Brilliant in all aspects... Go for it!
ஜிப்ரான் செம்ம
ஜிப்ரான் கடந்த வாரம் #அறம், இந்த வாரம் #தீரன் இரண்டிலும் சிக்ஸர் தான், #விஸ்வரூபம்2 எப்போ..?
குறை தெரியலை
செம பரபரப்பான படம். சிறப்பா பன்னிருக்காங்க.. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு Back Story, Investigation Detailing, அந்த போலிஸ் ஆப்பரேஷனை Execute பண்ண விதம், அப்பப்ப சிஸ்டத்த வார்ற வசனம்னு டாப் கிளாஸ் Writing. அந்த Detailing படத்த Lengthyஆ தோன வெச்சாலும் அது பெரிய குறையா தெர்ல.. செம
ராயல் சல்யூட்
#தீரன்_அதிகாரம்_ஒன்று - நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ராயல் சல்யூட்டோடு அவர்களுக்கு சமர்ப்பனம்.
தாறுமாறு ஃபர்ஸ்ட் ஹாஃப்
#தீரன்அதிகாரம்ஒன்று அடங்கப்பா டேய்...தாறுமாறான பர்ஸ்ட் ஹாஃப்...டீட்டைலிங்கும் சரி..பரபரப்பான ஸ்க்ரீன்ப்ளேலயும் சரி..H.Vinoth Writing.. செம பதபதைப்ப கூட்டிருச்சு இண்டர்வல் ப்ளாக்..
முதல் பாதி
தீரன் அதிகாரம் ஒன்று முதல் பார்ட், த்ரில்லிங் சூப்பர்!
நல்லா இருக்குங்கிறாங்க
என்ன வர்ற எல்லாப் படமும் நல்லாருக்குன்றாங்க.. இதுக்கே தனி பட்ஜெட் ஒதுக்கணும் போலயே?! #தீரன்அதிகாரம்ஒன்று
ஹிட் மூவி
தீரன் அதிகாரம் ஒன்று ரொம்ப நாட்களுக்குப் பின் கார்த்திக்கு ஒரு ஹிட் மூவி.


Click it and Unblock the Notifications











