'செவத்தப்புள்ள... மனசுக்குள்ள...' - கார்த்தி நடிக்கும் போலீஸ் படத்தின் லிரிக்கல் வீடியோ
சென்னை : கார்த்தி நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இடம்பெறும் 'செவத்தப்புள்ள' பாடலின் லிரிக்கல் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
'சதுரங்க வேட்டை' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துவரும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.
இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறாரர். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

வித்தியாசமான திரைக்கதை
'சதுரங்க வேட்டை' படத்தில் வித்தியாசமான திரைக்கதை இடம்பெற்றதைப் போலவே 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் வித்தியாசமான திரைக்கதை இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஜிப்ரான் இசை
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஆகியவை வெளியாகியுள்ளன.
செவத்தப்புள்ள லிரிக்கல் வீடியோ
இந்நிலையில், வெளியாகியிருக்கும் 'செவத்தப்புள்ள' பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை ஜிப்ரான் மற்றும் கே.ஜி.ரஞ்சித் இணைந்து எழுதிப் பாடியிருக்கின்றனர்.

ரிலீஸ் தேதி
'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'சிறுத்தை' படத்திற்குப் பிறகு கார்த்தி போலீசாக நடிக்கும் படம் என்பதாலும், சதுரங்க வேட்டை இயக்குநரின் படம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











