'தீரன்' படத்தின் வெற்றி விழா ரத்து.. - இதுதான் காரணம்!
சென்னை : நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியனின் தொல்லை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் தயாரிப்பாளர்களிடம் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து தொல்லை செய்வதாகவும், இவர்களிடம் சிக்கிவிடக்கூடது எனவும் உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இதையடுத்து சசிகுமார் உள்ளிட்டோர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அசோக் குமாரின் தற்கொலைச் செய்தி சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஷால், கௌதம் மேனன் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் அசோக் குமார் மரணத்தால் இன்று வெற்றி விழா கொண்டாட இருந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவினர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். அவர்கள் அசோக் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, இன்று மாலை நடைபெறவிருந்த 'ரிச்சி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 'ரிச்சி' படக்குழுவினரும் அசோக்கின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











