twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீரன் அதிகாரம் ஒன்று... முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

    By Shankar
    |

    கார்த்தியின் திரையுலக பயணத்தில் தீரன் அதிகாரம் ஒன்றுபடம் முக்கியமானது. காஷ்மோரா, காற்று வெளியிடை தொடர் தோல்விக்கு பின் நேற்று ரீலீஸ் செய்யப்பட்ட படம். போட்டிக்கு களத்தில் முண்ணனி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகவில்லை. வெற்றி பெற்று ஆக வேண்டிய சூழலில் ரீலீஸ் ஆன தீரன் படம் படைப்பு ரீதியாக இதுவரை (2017) வெளியான படங்களில் தவிர்க்க முடியாத படைப்பு. காவல்துறை பற்றி இதுவரை வந்த படங்களில் உண்மைக்கு அருகே இருக்கும் படம் தீரன்தான்.

    அரசு எந்திரத்தில் நேர்மையான அதிகாரியாக இருப்பது எவ்வளவு சிரமமானது, அதன் விளைவுகளை நேர்மையாக பதிவு செய்திருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று.

    Theeran Athikaram Ondru Opening day Box Office

    சுமார் 16 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்று 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான தீரன் படத்திற்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள எந்த தியேட்டரிலும் பெரிய ஓபனிங் இல்லை.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில்தாந் டிக்கட் விற்பனை மூன்று இலக்கத்தை தொட்டது. புறநகர் பகுதிகளில் இரட்டை இலக்கத்துடன் போராடியது.

    தீரன் அதிகாரம் படம் நன்றாக இருக்கிறது என பார்த்தவர்கள் கூறினாலும் கூட்டம் அதிகரிக்காதது ஏன் என தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்த போது, "கார்த்தி ஏற்கனவே நடித்து வெளிவந்த காற்று வெளியிடை, காஷ்மோரா படங்கள் ரசிகனுக்கு மரண பயத்தை கொடுத்த படங்கள். அதனால் ஓபனிங் இல்லை. விக்ரம் வேதா போன்று இந்த படம் லேட் பிக்அப் ஆகும்," என்றனர்.

    Theeran Athikaram Ondru Opening day Box Office

    முதல் நாள் தீரன் அதிகாரம் 2 கோடியே 68 லட்சத்து 50,000 ம் மொத்த வசூல் ஆகியுள்ளது. கார்த்தி ஏற்கெனவே நடித்து வெளிவந்த படங்கள் முதல் நாள் 3 கோடி வரை மொத்த வசூல் செய்துள்ள.

    அதனுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் குறைவு ஏனென்றால் கேளிக்கை வரி, GST சேர்த்து வசூலான தொகை 2,68,50,000 இதில் வரிகளை கழித்தால் 2 கோடிதான் நிகர வசூல். தீரன் இன்னும் வேகமெடுத்தால் மட்டுமே கரை சேர முடியும்.

    -பாக்ஸ்ஆபீஸ் பாட்ஷா

    English summary
    Here is the Box Office report of the first day of Karthi's Theeran Athikaram Ondru
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X