twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தீரன்' படத்தில் வந்த உண்மையான கொள்ளையனின் புகைப்படம் - வெளியிட்டது போலீஸ்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இந்தப் படம் 1995 முதல் 2005 வரை நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட கூட்டத்தை தமிழக போலீசார் பிடித்த கதையை வைத்து தீரன் படம் உருவாகியுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொள்ளையர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

    Theeran's oma baweria original photo

    இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்தார். அவர்கள் சில தடயங்களை வைத்து, தமிழர்களை அச்சுறுத்திய கொள்ளையர்களைக் கண்டுபிடித்து காவல் துறைக்குப் பெருமை சேர்த்தனர்.

    கொள்ளக்கூட்டத் தலைவனான ஓமா பவேரியாவாக ஒரு பாலிவுட் நடிகர் நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று அப்போது காவல்துறையில் பணியில் இருந்த போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளைக்கூட்டத் தலைவன் ஓமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து ஓமா பவேரியா சிறையில் இருக்கும்போதே இறந்துவிட்டான் என்று கூறியதோடு அவனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

    English summary
    A Bollywood actor has played the role of the robber leader Oma Baweria in 'Theeran adhigaaram ondru' movie. Oma Bavaria had died while he is in jail in the real story. TN police has released Oma baweria's photograph.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X