‘தீர்ப்புகள் விற்கப்படும்' போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு.. படக்குழுவினர் மகிழ்ச்சி !
சென்னை : தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
அதனால் சமீபகாலமாகவே பண்டிகை நாட்களில் படங்களை வெளியிடுவதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் , பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நம்பிக்கை உள்ளது
ஹனி பீ படநிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் இது குறித்து விவரிக்கையில், "எங்கள் படத்தின் போஸ்டருக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த மகத்தான நேர்மறை வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ரசிகர்கள் நிச்சயமாக எங்கள் படத்தை உச்சி முகர்ந்து பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த வரவேற்பு ஏற்படுத்தியிருக்கிறது.

தணிக்கைக்கு அனுப்பப்படும்
இந்தப் பெருமைகள் அனைத்தும் சத்யராஜ் சாரையே சேரும். அவர் எங்கள் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழுப் படத்தையும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. இறுதி கட்ட பின் தயாரிப்புப் பணியில் இருக்கும் இப்படம் விரைவில் தணிக்கைக்கு அனுப்பபடவிருக்கிறது" என்றார்.

அவசியமான தலைப்பு
மேலும் பேசிய அவர், சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதற்காக போராடும் ஒரு தனி மனிதனின் ஆதங்கமே இந்த திரைப்படம். இப்படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும். அந்த தலைப்பு இந்த படத்திற்கு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

பிரசாத் எஸ்.என் இசையமைக்கிறார்
நீண்ட நாட்களுக்கு பின் இப்படத்தில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடித்திருக்கிறார். தீரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரசாத் எஸ்.என். இசையமைக்கும் இப்படத்தை கருடவேகா ஆஞ்சி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை நுஃபல் அப்துல்லா கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

போஸ்டருக்கு வரவேற்பு
பக்ரீத் அன்று வெளியாகிய இப்படத்தின் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த போஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை முன்னிட்டு படக்குழுவினர் உற்காகம் அடைந்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்கப்பட்டு ரசிக்கப்படும் என்றும் படக்குழுவினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











