'தில்லுமுல்லு'வை ஓவர்டேக் பண்ணிய 'தீயா வேலை செய்யணும் குமாரு'!

By Shankar

சென்னை: சமீபத்தில் வெளியான தில்லு முல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இரண்டுமே காமெடிப் படங்கள் என்பதால், ரசிகர்கள் கவலையை மறந்து சிரித்துவிட்டு வர இந்தப் படங்கள் ஓடும் தியேட்டர்களை நாடுகின்றனர்.

தில்லு முல்லு

தில்லு முல்லு

தில்லு முல்லு படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இதே பெயரில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட படத்தின் ரீமேக். ஆனால் காட்சிகளை இன்றைய சூழலுக்கு ஏற்பட முற்றிலுமாக மாற்றி, வசனங்களில் சிரிப்புத் தோரணம் கட்டியுள்ளனர். க்ளைமாக்ஸில் வரும் சந்தானம் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்து வைத்து அனுப்புகிறார்.

தீயா வேலை செய்யணும் குமாரு

தீயா வேலை செய்யணும் குமாரு

இந்தப் படம் அக்மார்க் சுந்தர் சி படம். காமெடிக்கும் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக ஹன்ஸிகாவை குலுங்க விட்டிருக்கிறார். படம் முழுக்க சந்தானத்தின் காமெடி கொடிகட்டிப் பறக்கிறது.

பாக்ஸ் ஆபீஸ்...

பாக்ஸ் ஆபீஸ்...

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சென்னையில் தலா 20 அரங்குகளில் இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன. புறநகர்களில் உள்ள மால்களிலும் இந்தப் படங்களே பிரதான இடம் பிடித்துள்ளன.

முந்தியது தீயா வேலை செய்யணும் குமாரு

முந்தியது தீயா வேலை செய்யணும் குமாரு

இரண்டு படங்களில் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது சுந்தர் சியின் தீயா வேலை செய்யணும் குமாரு. சென்னையில் மட்டும் முதல் வார கலெக்ஷன் ரூ 1.36 கோடி. தில்லுமுல்லு கொஞ்சம் கம்மி... ரூ 90 லட்சத்தை ஓபனிங் வசூலாகப் பெற்றுள்ளது.

இரண்டுமே ஓகேதான்

இரண்டுமே ஓகேதான்

வசூலில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இரண்டுமே விநியோகஸ்தர்களுக்கு பாதகமில்லாத படங்களாக கருதப்படுகின்றன. இன்னும் ஒரு வாரம் ஓடினாலே லாபம்தான் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X