அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க‘.. அட்டகாசமான க்ரைம் தில்லர் படம்!

சென்னை: அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் நவம்பர் 21ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'தீயவர் குலை நடுங்க'. இதன் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து படம் வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது நிலையில், படம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அறிமுக தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சரவணன் அபிமன்யு, இசையமைப்பாளராக பரத் ஆசிவகன், எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் உள்ளிட்டோர் பணியாற்றி உள்ளனர்.

Arjun Aishwarya Rajesh Theeyavar Kulaigal Nadunga
Photo Credit:

தீயவர் குலை நடுங்க: சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மர்மமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீஸர் செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஆக்ஷன் திரைப்படம்: இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நவம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு சிறப்பான அக்ஷன் திரைப்பட அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தீயவர் குலை நடுங்க' படத்தை தொடர்ந்து, சூடா மற்றும் ப்ரீ வெட்டிங் ஷோ போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து புகழ் பெற்ற நடிகர் வீர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகி உள்ளார். பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X