twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ பாலா.. இப்போ மிஷ்கின்.. இயக்குநர்களுக்கு குறைகிறதா மரியாதை.. என்ன நடக்குது கோலிவுட்டில்?

    |

    சென்னை: கேப்டன் ஆஃப் தி ஷிப் எல்லாம் இனி இல்லை.. முதலில் அந்த கேப்டனை தூக்கி கடலில் போட்டு, கப்பலை ஓட்டு என்ற நிலைமைக்கு தற்போது தமிழ் சினிமா மாறியுள்ளது.

    ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாக மாறி வரும் சூழலில், இனிமேல் இயக்குநர்களுக்கு மரியாதை எல்லாம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

    இயக்குநர் பாலாவை தொடர்ந்து, தற்போது, இயக்குநர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன்? ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே?நடிகை நமீதாவுக்கு ரொமான்ஸ் போரடிச்சிடுச்சாமே ஏன்? ஆடியோ விழாவில் இப்படி சொல்லிட்டாரே?

    பாலா நீக்கம்

    பாலா நீக்கம்

    பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் தான் நடிகர் விக்ரமுக்கு, தமிழ் சினிமாவில் திருப்புமுனை படமாகவும், வெற்றி படிக்கட்டாகவும் இருந்தது. இந்நிலையில், விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் அறிமுகமாகும் படத்தை பாலாவை வைத்து இயக்க விக்ரம் முடிவு செய்திருந்தார். இறுதியில், பாலாவை நீக்கியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    எல்லாமே வேஸ்ட்

    எல்லாமே வேஸ்ட்

    அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா எனும் பெயரில் பாலா ரீமேக் செய்திருந்தார். த்ருவ் விக்ரம், மேகா சவுத்ரி, ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் என பலர் நடிப்பில் உருவான வர்மா படத்தை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு, கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா படத்தை எடுத்தனர். ஆனால், அந்த படமும் படுதோல்வியை சந்தித்து, மொத்தமும் லாஸ் ஆனது தான் மிச்சம்.

    துப்பறிவாளன்

    துப்பறிவாளன்

    தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் விஷாலுக்கு, 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஹாலிவுட் படமான ஷெர்லாக் ஹோம்ஸ் தாக்கத்தில், இந்த படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். விஷாலுடன், பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

    மிஷ்கின் நீக்கம்

    மிஷ்கின் நீக்கம்

    முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை, சென்னை, லண்டன் என பிரம்மாண்டமாக மிஷ்கின் இயக்கி வந்தார். இந்நிலையில், அதிக செலவு செய்வதாக, தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை துப்பறிவாளன் 2ம் பாகத்தில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் மீண்டும் கோலிவுட்டை பரபரப்பாக்கி உள்ளது.

    கங்கனா ரனாவத் படத்திலும்

    கங்கனா ரனாவத் படத்திலும்

    கோலிவுட்டில் மட்டுமின்றி, பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படத்திலும், இதுபோன்ற பிரச்சனை நடந்தது. சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்‌ஷ்மி பாய் வாழ்க்கையை மையமாக வைத்து, டோலிவுட் இயக்குநர் க்ரிஷ் இயக்கிய படத்தை, கடைசியாக, தான் தான் இயக்கினேன் என கங்கனா ரனாவத் உரிமை கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியது.

    கீர்த்தி சுரேஷ் நீக்கம்

    கீர்த்தி சுரேஷ் நீக்கம்

    இயக்குநர்களுக்கு மட்டுமின்றி, பல படங்களில், நடிகர், நடிகைகளுக்கே இந்த பிரச்சனை எழுந்துள்ளது. சீரியலில், இந்த கேரக்டரில் இவருக்கு பதில், இனி இவர் நடிப்பார் என்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அஜய்தேவ்கன் படமான மைதான் படத்திற்காக உடல் எடையை எல்லாம் குறைத்து ஒல்லியாக மாறிய தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷை கழட்டி விட்டு, பிரியாமணியை இணைத்த கதையும் சமீபத்தில் அரங்கேறியது தான்.

    குறையும் மரியாதை

    குறையும் மரியாதை

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது, இயக்குநருக்கான மரியாதையும் மதிப்பும் குறைந்து வருவதை காட்டுகிறது. இயக்குநர் தான் எல்லாம், கேப்டன் ஆஃப் தி ஷிப் என்ற வார்த்தைகள் எல்லாம், இன்னும் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடும் போலத் தெரிகிறது.

    இவங்களும் சரியில்லை

    இவங்களும் சரியில்லை

    இயக்குநர்கள் பக்கமும் தவறுகள் தொடர்ந்து கொண்டு வருவதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். கதைத் திருட்டு, இஷ்டத்துக்கு செலவு, சொன்னது ஒன்று செய்வது ஒன்று என்று செய்தால், இதுபோன்ற பிரச்சனைகள் எழத்தான் செய்யும். தனது படம் வெற்றி பெற வேண்டும் என செலவு செய்யும் நாயகர்கள், தாங்களே இயக்குநர் நாற்காலியிலும் இனி அமர்வார்கள்.. படம் எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    After Director Bala threw away from Arjun Reddy remake, now Director Mysskin threw away from Thupparivaalan 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X