தண்ணீருக்கு அடியில் சாகசம்.. செம த்ரில்லர் படமாக உருவாகி வரும் “தென் சென்னை”.. என்ன கதை தெரியுமா?

சென்னை: தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது..
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.

இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், 'பொன்னியின் செல்வன்' நாடக புகழ் இளங்கோ குமனனும் பிரதான பாத்திரங்களை ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரணி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

then chennai jen martin kollywood

அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். "டாடா" திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் கைகோர்த்துள்ளனர். இப்படதின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டீசர் ட்ரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் "புது வானம் புது பூமி" இனிமையான மெலடி பாடலாகவும் , குழுவினரின் வித்யாசமான முயற்சியில் மிரட்டலான டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்சி செய்வது போன்ற சாகச காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்று காட்சிகளை தத்ரூபமாக படமாக்கி உள்ளனர், இது ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X