Varalakshmi - பின்னாடி தட்டினான்.. என்ன செய்தேன் தெரியுமா?.. வரலட்சுமி பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: Varalakshmi(வரலட்சுமி) பப் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்தவரை வெளுத்து எடுத்துவிட்டதாக நடிகை வரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.
போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி:
வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
பாலா படத்தில் நிரூபித்த வரலட்சுமி:
சூழல் இப்படி இருக்க பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த படமான தாரை தப்பட்டை படத்தில் கமிட்டானார் வரலட்சுமி. பாலா படம் என்றாலே நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும் என்ற விதியின்படி இந்தப் படத்திலும் வரலட்சுமிக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் இருந்தது. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார் வரலட்சுமி. அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அத்தனையிலும் அதகளம் செய்தார். இருப்பினும் தாரை தப்பட்டை போதிய ரசிகர்களை கவரவில்லை.
வரலட்சுமியின் கொன்றால் பாவம்:
மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தாலும் வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் அமையாததால் சில படங்களில் மட்டுமே நடித்துவருகிரார். கடைசியாக மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரபல கன்னட இயக்குநர் தயாள் பத்மநாபன் படத்தை இயக்க வரலட்சுமியுடன் சந்தோஷ் பிரதாப், சார்லி, இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

வரலட்சுமியின் பேட்டி:
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "நான் ஒருமுறை பப்புக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவன் என்னுடைய பின் பகுதியில் தட்டினான். அவனுக்கு ஏழரை சனி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய நண்பர்கள் அனைவரும் அந்த பையனை பார்த்து அய்யய்யோ இந்த பொண்ண போய் தொட்டுட்டியா அவ்வளவுதான் நீ செத்த என்ற தொனியில் அந்தப் பையனை பார்த்தார்கள்.
பின்னி எடுத்துவிட்டேன்:
பின்பு நான் அந்தப் பையனை பிடித்து இழுத்து கீழே போட்டு மிதித்து அவன் மேல் கண்ணாடியை போட்டு உடைத்து ஒரு வழி செய்துவிட்டேன். இன்னும் சில விஷயங்களையும் அவனுக்கு நான் செய்தேன். ஆனால், அதையெல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. அந்த சம்பவத்திற்கு பின்னர் அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணை தொட்டிருக்கவேமாட்டான். ஏன் அவன் மனைவியை தொடக்கூட பயந்திருப்பான். அந்த அளவுக்கு அவனை நான் பின்னி எடுத்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











