அதான் உன் புருஷன் உன்னை விட்டு போய்ட்டானா டி.. எல்லை மீறிய அசீம் ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த காஜல்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை காஜல் பசுபதி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த சீசனில் அசீம் வெற்றிப் பெற்றதை பலரும் கொண்டாடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். பெண்களையும், திருநங்கைகளையும் ஏன் கமல் சாரையே மதிக்காத ஒருத்தருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிக் கோப்பை எப்படி கொடுத்தார்கள் என பலரும் விளாசி வருகின்றனர்.

இந்நிலையில், அசீம் பற்றி நான் ஏதாவது ட்வீட் போட்டால் அப்யூசர் அசீம் ரசிகர்கள் உடனடியாக இப்படியொரு மானங்கெட்ட கேள்வியை கேட்டு வருகின்றனர் என பதிவிட்ட நடிகை காஜல் பசுபதி அசீம் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் அளவுக்கு இன்னொரு கேள்வியை எழுப்பி அசிங்கப்படுத்தி உள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நெகட்டிவிட்டியை அசீம் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வரவே பயப்படுறாங்க

பிக் பாஸ் வரவே பயப்படுறாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு வந்த நிலையில், சமீப காலமாக விஜய் டிவி ஆர்ட்டிஸ்ட் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் மாறி விட்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் என்றும் சின்னத்திரை நடிகர்கள் இல்லை என்று கூறப்பட்டாலும் அவர்களும் ஏதோ ஒரு வழியில் விஜய் டிவி கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்றே கூறுகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வர ரொம்பவே பயப்படுவது தான் காரணம் என்கின்றனர்.

டைட்டிலை வென்ற அசீம்

டைட்டிலை வென்ற அசீம்

இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவர் வாங்கினால் நல்லா இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கடைசி நேர ட்விஸ்ட்டாக அசீமுக்கு டைட்டில் சென்றது. ஆனால், அதை கொடுப்பதில் பிக் பாஸ் ஹோஸ்ட் கமல் சாருக்கே பெரிய விருப்பம் இல்லை என்பதை ஷோ பார்த்த போதே ரசிகர்கள் புரிந்து கொண்டதாக கமெண்ட்டுகள் குவிந்தன.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

பெண்களையோ, திருநங்கையையோ அல்லது சக மனிதர்களை கூட மதிக்கத் தெரியாத அப்யூசர் அசீமுக்கு ஏன் பிக் பாஸ் டைட்டில் கொடுத்தாங்க என பொதுமக்கள் முதல் சில பிரபலங்கள் வரை அசீமின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் கண்டபடி கழுவி ஊற்றி திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால், அசீம் அதையெல்லாம் கவலைப்படாமல் தன் வெற்றியை தானே கொண்டாடி வருகிறார்.

பிஆர் இருந்தா போதும்

பிஆர் இருந்தா போதும்

இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்ல வேண்டும் என்றால் சிறப்பாக எல்லாம் விளையாட வேண்டும் என்கிற அவசியமே இல்லை. எல்லாரையும் அசிங்கமாக திட்டிட்டு பெரிய பிஆர் டீம் வைத்து சில பல லட்சங்கள் செலவு செய்து விட்டு உள்ளே ஜாலியா இருந்தா போதும், டைட்டிலை தூக்கி கமல் சாரே கொடுத்து விடுவார் என பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

உன் புருஷன் உன்னை விட்டு போய்ட்டானா

உன் புருஷன் உன்னை விட்டு போய்ட்டானா

யாராவது அப்யூசர் அசீம் பற்றி ட்வீட் போட்டால், உடனடியாக அதான் உன் புருஷன் உன்னை விட்டு போய்ட்டானா டி டாஷ் என சிரிக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என நடிகை காஜல் பசுபதி கொடுத்துள்ள பதிலடி ட்வீட் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அசீம் பொண்டாட்டி எங்கே

அசீம் பொண்டாட்டி எங்கே

அடேய் காப்பி பேஸ்ட் பூமர்ஸ்.. சரி இப்போ சொல்லு நாயே உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டா? என அசீமையும் அசீம் ரசிகர்களையும் விளாசி எடுத்துள்ளார் நடிகை காஜல் பசுபதி. காஜல் பசுபதியின் இந்த ட்வீட்டுக்கு விக்ரமன் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X