தேனாண்டாள் பிலிம்சின் அடுத்தப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ்

தேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ். இதுவரை பல வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறது.

மெர்சல் படம்

மெர்சல் படம்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படம் விஜய் முன்று வேடங்களில் நடித்து வெளியானது. சிறப்பான வசூலையும் விமர்சனத்தையும் இந்தப் படம் பெற்றது. விஜய் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகவும் அமைந்தது.

அடுத்தப்பட அறிவிப்பு

அடுத்தப்பட அறிவிப்பு

இந்நிலையில் அறிமுக இயக்குநர் வீரேஷ் இயக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிராட்வே டைட்டில்

பிராட்வே டைட்டில்

படத்திற்கு பிராட்வே என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. ஆயினும் சாண்டி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இந்த அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

வித்தியாசமான போஸ்டர்

வித்தியாசமான போஸ்டர்

மேலும் படத்தின் போஸ்டரும் வித்தியாசமான வகையில் அமைந்துள்ளது. இரண்டு கைகள் இந்த போஸ்டரில் காணப்படுகிறது, ஒரு கையில் சிவப்பு துணியும் மற்றொரு கையில் கருப்பு துணியும் கட்டப்பட்டுள்ளதாக இந்த போஸ்டர் காணப்படுகிறது.

எதிர்பார்ப்பை தூண்டும் போஸ்டர்

எதிர்பார்ப்பை தூண்டும் போஸ்டர்

மேலும் நமது வாழ்க்கைக்காக நாம் போராடுகிறோம் என்பதான வசனமும் போஸ்டரில் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை தூண்டும்வகையில் அமைந்துள்ளது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை அளித்துவரும் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தையும் வெற்றிப்பட வரிசையில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X