‘’மெர்சல்’’ தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி !
சென்னை : மெர்சல் படத்தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் லேசான மாரடைப்புத்தான் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர்
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் (டி.எஃப்.பி.சி) தலைவராக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளும், டி.ராஜேந்தர் 337 வாக்குகளும் பெற்றனர். பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றுள்ளார். டி.ராஜேந்திரை விட 220 வாக்குகள் அதிகம் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்வாக தேர்வானார்.

தயாரிப்பாளர்
விலங்குகளை வைத்துப் படமெடுத்த பிரபலமான இயக்குநர் ராம.நாராயணன், தான் இயக்கிய 80க்கும் மேற்பட்ட படங்களைத் தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவி ஹேமா ருக்மணியும் நிறுவனத்தை நடத்தி பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் கடைசியாக அட்லீ இயக்கி விஜய் 3 வேடத்தில் நடித்த மெர்சல் திரைப்படத்தை தயாரித்தார்.

ராட்சத குரங்கு படம்
தேனாண்டாள் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ராட்சத மனித குரங்கு சூப்பர் ஹீரோ திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. கபி திரைப்படம் எனபெயரிடப்பட்டுள்ள இந்த படம் வேறலெவலில் உருவாகி வருகிறது. இந்த படத்தி முரளி ராமநாயணன் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் லேசான மாரடைப்புதான் என்றும், அவர் விரைவில் குணமடைந்துவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











