தளபதி 66 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.. காத்திருக்கும் 4 இயக்குனர்கள்!

சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலன்று வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது மாஸ்டர்.

அதை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கும் #தளபதி65 படத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் #தளபதி66 படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் என உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மீண்டும் இணைவாரா!?

மீண்டும் இணைவாரா!?

ஏற்கனவே தளபதி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பேராதரவும், வெற்றியும் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த கூட்டணி தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்

ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்

தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குனர் அட்லீ. இதில் மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. மெர்சல் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்ததை தொடர்ந்து மீண்டும் #தளபதி66 ல் இந்த கூட்டணி இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். #தளபதி66 படத்தை அஜய் ஞானமுத்து இயக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்.

இணைய வாய்ப்பு

இணைய வாய்ப்பு

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் H.வினோத். தற்போது அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் #தளபதி66 படத்தை H. வினோத் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X