twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் விரிசல்.. செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தேனப்பன்

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார்.

    |

    Recommended Video

    விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ

    சென்னை: நடிகர் விஷால் மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள தயாரிப்பாளர் தேனப்பன், தனது செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். இவரது தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம், சிறு தயாரிப்பாளர்கள் உள்பட அனைவருக்கும் பாரபட்சமின்றி செயல்பட்டு வருவதாக, சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விஷால் தரப்பினர் கூறிவந்தனர்.
    இந்நிலையில், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், விஷால் குழுவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இது தொடர்பாக விஷாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்.

    தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் பின்வருமாறு :

    "நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

    இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்.

    தனி அலுவலம் கூடாது:

    தனி அலுவலம் கூடாது:

    முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதற்கான என் எதிர்ப்பினை ஆரம்பத்தில் நடந்த செயற்குழு கூட்டங்களிலேயே பதிவு செய்துள்ளேன்.

    அப்படி தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென்றால் சிட்டியில் உள்ள திரையரங்கம் (உதாரணம் - கிருஷ்ணவேனி திரையரங்கம்) எதையாவது லீஸுக்கு எடுத்து நடத்தினால் அதன் மூலம் வருவாயும் ஈட்டலாம். மற்றும் அதையே அலுவலகமாகவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனையையும் கூட்டங்களில் பதிவு செய்துள்ளேன்.

    பென்சன் நிறுத்தம்:

    பென்சன் நிறுத்தம்:

    சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துவதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.

    சிலருக்கு மட்டும் சலுகை:

    சிலருக்கு மட்டும் சலுகை:

    சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.
    ஞானவேல்ராஜா அவர்களின் மீதும் பவித்ரன் அவர்களிள் மீதும் விதிமீறல்களை காரணம் காட்டி ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action) எடுப்பது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உடனே ஞானவேல்ராஜா அவர்களின் ‘நோட்டா' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    அவமதிக்கும் செயல்:

    அவமதிக்கும் செயல்:

    ஆனால் வேலை நிறுத்தம் முடிவுற்றவுடன் படப்பிடிப்பிற்கான முதல் அனுமதியே ஞானவேல்ராஜா அவர்களின் ‘நோட்டா' படத்திற்குத்தான் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மேல் நிலுவையில் இருந்த ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action) செயற்குழுவின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக விலக்கிக் கொள்ளப்பபட்டது.

    அந்த நடவடிக்கையை நியாயப்படுத்த பவித்ரன் அவர்கள் மீதும் நிலுவையில் இருந்த ஒழுங்கு நடவடிக்கையும் (Disciplinary Action) விலக்கிக் கொள்ளப்பட்டு வரலாற்றில் இல்லாத வகையில் அவருடைய இன்ஸூரன்ஸ் கார்டு அவரது வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இது செயற்குழுவை கடுமையாக அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகிறேன்.

    ஒப்புதல் இல்லை:

    ஒப்புதல் இல்லை:

    அதேபோல் செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

    கோரிக்கை நிறைவேறவில்லை:

    கோரிக்கை நிறைவேறவில்லை:

    வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடததப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே (சிண்டிகேட் ஒழிப்பு, ஆன் லைன் டிக்கெட் கட்டண ஒழிப்பு) வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியதில் எனக்கு உடன்பாடில்லை.

    வேதனை தான் மிஞ்சும்:

    வேதனை தான் மிஞ்சும்:

    வேலை நிறுத்தத்தினால் QUBE Cinema-வின் VPF கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 (Flat Rate) முறையில் வசூலிக்கப்படுகிறது. 4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும்பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தைவிடவும் அதிகம் என்பது தெரிகிறது. இதற்காகவா 48 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்தது என்பதை நினைத்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

    ரிரீஸ் ஒழுங்குமுறை இல்லை:

    ரிரீஸ் ஒழுங்குமுறை இல்லை:

    வேலை நிறுத்தத்தின் பொழுது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, பெப்சி படப்பிடிப்பு அனுமதி கமிட்டி, மற்றும் Release Regulation கமிட்டி ஆகியவை செயற்குழுவின் ஒப்புதல் பெறாமலேயே தன்னிச்சையாக அமைக்கப்பட்டது செயற்குழுவை அவமதிப்பதான செயலாகவே பார்க்கிறேன்.

    வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டவுடன் சொல்லப்பட்ட வாரம் மூன்று படங்கள் என்னும் Release Regulation என்பதை இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர் சங்கம் திணறுவதை பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டதையும், அந்தக் கமிட்டிதான் ரிலீஸ் தேதிகளை வரைமுறைபடுத்தும் பொறுப்பில் இருப்பதையும் கேள்விப்படுகிறேன்.

    எனக்கே இந்த நிலை:

    எனக்கே இந்த நிலை:

    இதைப் பற்றி என் சக தயாரிப்பாளர்களும், எனக்கு ஓட்டளித்த நண்பர்களும் கேட்கும் பொழுது செயற்குழு நிர்வாகத்தின் அங்கமாக இருக்கும் எனக்கே எதுவும் தெரியவில்லை என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. செயற்குழு உறுப்பினராக உள்ள எனக்கே இந்த நிலை என்றால் மற்ற தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    முரணான செயல்:

    முரணான செயல்:

    அதேபோல் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அவை அதிக திரையரங்குகளில் அதாவது 400, 500 திரையரங்குகளில் வெளியாகாமல் 300 திரையரங்குகளுக்குள் வெளியாகும்படி வரைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு ‘இரும்புத் திரை' படம் மட்டும் வெளியீட்டு அறிவிப்புக்கு மாறாக அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது தலைவரின் அறிவிப்புக்கு முரணான செயலாகவே கருதுகிறேன்.
    இது உள்பட மொத்தம் 15 காரணங்களை தேனப்பன் பட்டியலிட்டுள்ளார். பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், தேனப்பனின் ராஜினாமா அவருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

    English summary
    The tamil film producer Thenappan has resigned his executive committee member post in tamil film producers coouncil, accusing president Vishal and team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X