'சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து இன்றளவும் மீளமுடியவில்லை'... தயாரிப்பாளர் வேதனை!
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் நடிகர் டி.ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : வல்லவன் படம் தொடர்பாக நடிகர் டி.ராஜேந்தர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் தேனப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் படத்தின் காப்புரிமைக்காக தயாரிப்பாளர் தேனப்பன் தன்னை மிரட்டுவதாக டி.ராஜேந்தர் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன், வல்லவன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாமல் இன்றளவும் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

வல்லவன் காப்புரிமை
" சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் திரைப்படத்தின் இந்தி மற்றும் வடஇந்திய உரிமை எனது நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். அவ்வுரிமையை ஜெமினி கலர் லேப் மூலம் முறையாக பெற்றுள்ளேன்.

டி.ராஜேந்தர் பழி
இந்நிலையில் சிம்புவின் தந்தை நடிகர் டி ராஜேந்தர் வல்லவன் படத்தின் உரிமை தன்னிடம் உள்ளதாகவும், எங்கள் மீது பழி சுமத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

சிம்புவால் பாதிப்பு
நான் வல்லவன் படத்தை தயாரித்து, அதில் சிம்புவின் ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி, அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ தயாரிப்பாளர்கள்
என்னை போலவே எத்தனைவே தயாரிப்பாளர்கள் சிம்புவால் பாதிக்கப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் கதைகள் திரையுலகம் அறிந்ததே.

டி.ராஜேந்தருக்கு கண்டனம்
இந்நிலையில் என்னையும், எனது திரையுலகம் அனுபவத்தையும் கேலிக் கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த டி.ராஜேந்தர் மீது மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்", என தேனப்பன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











