காணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை!

By Siva

சென்னை: 7 சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம்.

அருள் சங்கர் என்பவர் எழுதி, இயக்கியுள்ள குறும்படம் தென்றல் வந்து தீண்டும் போது. இளைஞானி இளையராஜா வெறியரான அர்ஜுன்(ஆம் அவரை அப்படித் தான் சொல்ல வேண்டும்) யாழினியை பெண் பார்க்க சென்றபோது துவங்குகிறது படம்.

உண்மையாக இருக்கிறேன் என்ற பெயரில் தான் ஏற்கனவே காதலித்ததாக கூறுகிறார் அருண்.

 யாழினி

யாழினி

தன் கடந்த கால வாழ்க்கை தனது வருங்கால மனைவிக்கு தெரிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் முன்னாள் காதலை பற்றி அருண் கூற யாழினிக்கு பிடித்துப் போய் திருமணம் நடக்கிறது.

 சத்யா

சத்யா

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அருணின் முன்னாள் காதலி சத்யா பற்றி துருவித் துருவி கேட்கிறார் யாழினி. என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கு என்று பார்க்கிறவர்களுக்கே எரிச்சல் வருகிறது.

பென் டிரைவ்

திருமணத்திற்கு பிறகு இளையராஜா பாடலால் தம்பதிக்கு இடையே பிரச்சனை வருகிறது. அதிலும் குறிப்பாக ராஜா பாடல்கள் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போக கணவன், மனைவி இடையே பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை தீர்ந்து தம்பதி சேர்வதை அழகாக காண்பித்துள்ளார் அருள்.

 பென் டிரைவ்

பென் டிரைவ்

திருமணத்திற்கு பிறகு இளையராஜா பாடலால் தம்பதிக்கு இடையே பிரச்சனை வருகிறது. அதிலும் குறிப்பாக ராஜா பாடல்கள் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போக கணவன், மனைவி இடையே பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை தீர்ந்து தம்பதி சேர்வதை அழகாக காண்பித்துள்ளார் அருள்.

 சர்வதேச அளவில்

சர்வதேச அளவில்

தென்றல் வந்து தீண்டும் போது குறும்படத்திற்கு சர்வதேச அளவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன. குறும்படத்தை பார்த்த கையோடு இளையராஜா பாடல்களை தேடிக் கண்டுபிடித்து கேட்கச் செய்துவிட்டனர். வாழ்த்துக்கள் அருள் மற்றும் குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X