தேவாவின் குரலில், இலங்கை கவிஞரின் வரியில்.. அசத்தலான ஆல்பம்!

சென்னை: ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் தேவா பாடியுள்ள அசத்தலான ஆல்பம் வெளியாக உள்ளது.

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக தேனிசைத் தென்றல் தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

Thenisai thendral Deva sings an album penned by Lankan poet Pottuvil Asmin

புதிய ஆல்பம்: தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பே இல்லை பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

வைரலான பாடல்கள்: முத்து முத்து கருவாயா, தாகம்தீர வானே இடிந்ததம்மா, சண்டாளனே, கண்ணத்தொறந்ததும் சாமி ஆகியவை பாடல்களை எழுதி உள்ள அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித் குமார் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்: இலங்கையில் இருந்த வெளியாகி உலகெங்கும் டிரெண்டான ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்... பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்' பாடலும் இவர் எழுதியது தான். உலகம் முழுவதும் அனைத்து தளங்களிலும் சுமார் ஆறு கோடி பேர் இந்தப் பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்திலும், மலேசியா தேர்தலிலும் கூட இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது.

மீண்டும் கூட்டணி: தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இதுவரை பாடல்கள் எழுதியுள்ள அஸ்மின், இலங்கையிலும் தமிழகத்திலும் மோஸ்ட் வான்டட் பாடலாசிரியராக கவனம் ஈர்த்திருக்கிறார். முத்து முத்து கருவாயா மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ரிலீஸ்: இது குறித்து பேசிய கவிஞர் பொத்துவில் அஸ்மின், தேவா அவர்களின் குரலில் அமைந்த ஹிட் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்க தயாராகி வருகிறது. பாடல் தலைப்பையும் புரோமோவையும் மிக விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X