leo mistake: லியோ படத்துல கதை ஒன்னுமே பெருசா இல்ல.. பெரிய குறை இதுதான்.. ரசிகர்கள் சொல்வது என்ன!
சென்னை: லியோ படத்துல கதை ஒன்னுமே பெருசா இல்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் ஒருவழியாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் லியோ: தளபதியின் 67வது படமான லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக இருக்கிறது. அந்த விதத்தில், லியோ படம் இதற்குமுன் பிற படங்கள் செய்த வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயிரம் கோடி வசூல் செய்யாது: லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, தொகுப்பாளர் ஆயிரம் கோடி வசூல் குறித்து கேட்டபோது, ஆயிரம் கோடி வசூல் செய்ய வாய்ப்பு இல்லை, ஏனென்றால், ஹிந்தி சினிமாவில் லியோ படத்திற்கான வரவேற்பு கொஞ்சம் குறைவு என கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சால் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
கதை ஒன்றுமே பெரிசா இல்ல: இந்நிலையில், லியோ படத்தில் உள்ள குறை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதில், லியோ படத்தை மூன்று முறை பார்தேன், படத்துல கதை ஒன்றுமே பெரிசா இல்ல. அதே பழைய கதை தான், ரொம்ப சின்ன நாட் தான். ஆனால் படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை எல்லாமே சூப்பர். இசை ரசிக்கும் படி இல்லை, இந்த படத்தை பார்க்கும் போது அனிருத்துக்கு இசை அறிவு இல்லை என்று தான் தோன்றுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி அவரால் மெலடியை தரமுடியாது.
முதல் பாதி ஒகே: ஆனால், ஒரு பாட்டுக்கு பிரபுதேவாவிற்கு இணையாக அட்டகாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். நான் ரெடி பாடலில் விஜய்க்கு நல்ல நடன ஸ்டெப்ஸ்களை சொல்லி கொடுத்திருக்கலாம். சில வசனங்களை தெளிவாக கேட்க கூட முடியவில்லை என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். லியோ படத்தின் முதல் பாதிதான் நன்றாக இருந்ததாகவும் இரண்டாம் பாதி லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கம் போலவே தெரியவில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்துகளை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











