விபத்து நேரத்தில் வதந்திகளை பரப்பினார்கள்.. எலும்பு முறிவில் இருந்து மீண்ட பிரபல நடிகை பரபரப்பு!
பெங்களூரு: கார் விபத்தில் சிக்கிய நேரத்தில் என்னைப் பற்றி ஏராளமான கதைகள் வெளிவந்தன என்று நடிகை ஷர்மிளா மந்த்ரே தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய 'மிரட்டல்' படத்தில் நடித்திருந்தார்.

ஆக்ஷன் காமெடி
இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். சந்தானம், பிரபு, பிரதீப் ராவத், பாண்டியராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆக்ஷன் காமெடி படமான இது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை தயாரித்தார்.

நண்பருடன் காரில்
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி, அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடித்துள்ள நானும் சிங்கிள்தான் படங்களைத் தயாரித்துள்ளார். கன்னட படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடிகை ஷர்மிளா, தனது நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் அதிகாலை சென்றுகொண்டிருந்தார்.

ஷர்மிளா படுகாயம்
பெங்களூரில் உள்ள வசந்த் நகரில் பாலம் ஒன்றில், கார் திடீரென்று மோதியது. இதில் நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார். அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரப்ப வேண்டாம்
பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாயின. நடிகை ஷர்மிளா அதை மறுத்திருந்தார். இந்த கொரோனா நேரத்தில் சமூக விலகலைப் பற்றி வலியுறுத்தி வருபவள் நான். நான் எப்படி பார்ட்டிக்கு போவேன்? உண்மை தெரியாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஆவேசமாகக் கூறி இருந்தார், ஷர்மிளா.

குணமாகி விட்டேன்
இந்நிலையில், இப்போது தான் முழுமையாகக் குணமாகி விட்டதாகக் கூறியுள்ளார் நடிகை ஷர்மிளா மந்த்ரே. 'இந்த கஷ்டமான காலகட்டத்தில் இருந்து என்னை காப்பாற்றிய டாக்டர்கள், விசாரித்த நண்பர்கள், ஆறுதல் அளித்த தோழிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டேன்.
Recommended Video

எலும்பு முறிவு
'விபத்து நடந்த நேரத்தில், என்னைப் பற்றி பல்வேறு கதைகள் பரப்பப்பட்டன. அது எதுவும் உண்மை இல்லை. அந்த நேரத்தில், எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தேன். உடல் நலம் தேறினால் போதும் என்றிருந்ததால் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை' என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











