புஷ்பா படத்திற்கு ஏற்பட்டுள்ள சுணக்கம்… இந்தியில் வாங்க ஆள் இல்லை !

சென்னை : அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா திரைப்படத்தை இந்தியில் வாங்க சரியான விநியோகஸ்தர் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் திரைப்படத்திற்கு இந்தியில் பெரிதும் வரவேற்பு இல்லாததால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் படக்குழு பெரிய விநியோகஸ்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது.

புஷ்பா

புஷ்பா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளன. இத்திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு கூடியுள்ளது.

பெரிய அளவில் விளம்பரம்

பெரிய அளவில் விளம்பரம்

பாகுபலி திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய உச்சம் தொட்டார் பிரபாஸ். அதே போல, புஷ்பா திரைப்படத்தையும் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் இந்தி என 5 மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் பாகுபலி திரைப்படத்தை கரண் ஜோஹர் இந்தியில் வாங்கி மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி பெரும் லாபத்தை சம்பாதித்தார்.

வாங்க ஆள் இல்லை

வாங்க ஆள் இல்லை

புஷ்பா திரைப்படத்தை இந்தியில் வாங்க ஆள் இல்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரைப்படத்திற்கு இந்தியில் பெரிதும் வரவேற்பு இல்லாததால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழு பெரிய விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X