Jason Sanjay - இயக்குநரான விஜய் மகன் சஞ்சய்.. ஃபோன் போட்ட அஜித்?.. ஒருவேளை அதுவா இருக்குமோ?

சென்னை: Jason Sanjay (ஜேசன் சஞ்சய்) விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநரானதை அடுத்து அவருக்கு அஜித்குமார் ஃபோன் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தின் பாடலிலும், சாஷா தெறி படத்தின் கடைசி காட்சியிலும் நடித்திருந்தார்கள்.

There are reports that after Vijays son Jason Sanjay became a director Ajith Kumar called him

தொடர்ந்து நடிப்பு இல்லை: ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தின் பாடலில் தோன்றியதை அடுத்து கண்டிப்பாக விஜய் தனது மகனை ஹீரோவாகத்தான் களமிறக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அந்தப் பாடலுக்கு பிறகு சஞ்சய் திரையில் தலை காண்பிப்பதை நிறுத்திவிட்டார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த அவர் இயக்கத்திற்கு தொடர்பான படிப்பை கனடாவில் படித்துவந்தார்.

ஸ்ட்ரிக்ட்டாக நோ: அதேசமயம் சஞ்சய்யை சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக்கிவிட சிலர் முயற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது. நேரம் படத்தின் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன்கூட தன்னுடைய மகனை நடிக்க வைக்க முயன்றதாகவும்; ஆனால் சஞ்சய்யோ ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டார் என்றும் விஜய்யே பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சுதா கொங்கராவும் சஞ்சய்யை ஹீரோவாக களமிறக்க முயன்றதாக கூறப்பட்டது.

இயக்கம்: கனடாவில் படித்து வந்த ஜேசன் சஞ்சய் சமீபத்தில் புல் தி ட்ரிக்கர் (Pull The Trigger) என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான பிறகுதான் சஞ்சய் இவ்வளவு வளர்ந்துவிட்டாரே என பலரும் ஆச்சரியப்பட்டனர். மேக்கிங் ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக சஞ்சய் இயக்குநராக மட்டுமே ஆவார் என்றும் உறுதிப்படுத்திக்கொண்டனர். மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், சஞ்சய் இயக்குநராகத்தான் வருவார் என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அவதாரம்: இந்நிலையில் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.விஜய் நடிப்பில் உருவான கத்தி உள்ளிட்ட படங்களை தயாரித்து தமிழில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்குகிறார் சஞ்சய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும்.

ஃபோன் செய்த அஜித்?: சஞ்சய் இயக்குநர் ஆனதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் அஜித்தும் சஞ்சய்க்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சஞ்சய்யிடம் அந்த உரையாடலில் தனக்கு ஒரு கதை இருந்தாலும் சொல்லும்படி அஜித் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X