Nayanthara - ப்ரோமோஷனுக்கு நோ.. ஆனா அம்பானி வீட்டுக்கு வந்துட்டீங்க.. நயன்தாரா மேல் கடுப்பில் ஷாருக்கான்?

மும்பை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா அம்பானி வீட்டுக்கு சென்றது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

There are reports that Shah Rukh Khan is angry with Nayanthara

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும், மண்ணாங்கட்டி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார். அவருக்கு விக்னேஷ் சிவனும் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார்.

இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து அவருக்கு ஹிந்தி வாய்ப்புகள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

நோ மீன்ஸ் நோ: ஆனால் நயனை பொறுத்தவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர். ப்ரோமோஷனில் கலந்துகொள்ளமாட்டேன் என கூறும் நயன் ஜவான் படத்தின் ப்ரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை. ஷாருக்கானே நேரடியாக பேசியும் அவர் நோ சொல்லிவிட்டார் என்றும்; வேண்டுமென்றால் இன்ஸ்டா கணக்கு தொடங்கி அதில் ப்ரோமோட் செய்கிறேன் என்று சொல்லித்தான் இன்ஸ்டா கணக்கை தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது.

கடுப்பில் ஷாருக்?: சூழல் இப்படி இருக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகேஷ் அம்பானி வீட்டுக்கு ஜவான் படக்குழு சென்றது. அப்போது நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றனர். ஆனால் இப்போது அதை வைத்துதான் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தான் கூப்பிட்டும் ஜவான் ப்ரோமோஷனுக்கு வரவில்லை. அதேபோல் ஜவான் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவுக்கும் வரவில்லை. ஆனால் தற்போது அம்பானி அழைத்ததும் உடனடியாக வந்துவிட்டாரே என ஷாருக்கான் கடுப்பில் இருக்கிறாராம்.

மேலும் இவரை நம்பி எப்படி அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகளை வழங்குவது அல்லது மற்றவர்களிடம் பரிந்துரைப்பது என்ற யோசனையிலும் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி இதை கவனித்த பாலிவுட்டின் மற்ற இயக்குநர்களும் ஷாருக்கானின் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X