Anirudh - வெளிநாட்டு மோகத்தில் மிதக்கும் அனிருத்?.. எல்லாமே அந்த ஒரு விஷயத்துக்காகத்தானா?

சென்னை: Anirudh (அனிருத்) இசையமைப்பாளர் அனிருத் வெளிநாட்டு மோகத்தில் மிதப்பதற்கு அந்த ஒரு விஷயம்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. இதனையடுத்து இன்னும் பல வருடங்களுக்கு அனிருத்தின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கப்போவதாக ஆரூடம் கூறினார்கள்.

There are reports that that is the reason why music composer Anirudh in foreign craze

அனிருத் ஆட்சி: அதனை உறுதிப்படுத்தும் விதமாக அனிருத்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான அதிர்வை தமிழ் சினிமா கண்டதோ அதேபோல் அனிருத் வருகையின்போதும் இருந்ததாக பலர் வியந்தபடி சொன்னது குறிப்பிடத்தக்கது.

ஒருகட்டத்தில் அனிருத் இசை இல்லாமல் படங்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்களே அனிருத்தின் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் லைன் அப்: விஜய் நடித்திருக்கும் லியோ, ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர், கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 என வரிசையாக ரவுண்டு கட்டி அடித்துவருகிறார் அனிருத். லியோ படத்திலிருந்து வெளியான நா ரெடிதான் பாடலும், ஜெயிலர் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது.

ஜவான்: கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் என்ட்ரி ஆகியிருக்கிறார் அனிருத். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடித்திருக்கும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அட்லீயின் மேக்கிங் ஒருபக்கம் தீயாக இருக்க அனிருத்தின் இசை படத்தை வேறு எங்கோ கொண்டு போய்விடும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.மேலும் பாலிவுட்டிலும் அனி ஆட்சி தொடங்கப்போகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

கான்செர்ட்டுகள்: திரைப்படங்களில் எப்படி அனிருத் பிஸியாக இருக்கிறாரோ அதேபோல் வெளிநாடுகளில் கான்செர்ட் நடத்துவதிலும் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில்கூட மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அவர் இசை கச்சேரி நடத்தினார். அவருடன் ஜோனிடா காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பெர்ஃபார்ம் செய்தனர். வெளிநாடுகளில் நடக்கும் அனிருத்தின் கான்செர்ட்டுக்கு வரவேற்பும் பலமாகவே இருக்கிறது.

வெளிநாட்டிலேயே இருக்கும் அனி: அங்கு தன்னுடைய கச்சேரிகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் பாதி நாட்கள் வெளிநாட்டில்தான் இருக்கிறாம். அதுமட்டுமின்றி தன்னுடைய பாடல்களைத்தான் அங்கு பாடுவார் அனிருத். புதிதாக எதுவும் செய்வதில்லை. ஆனால் அதற்கே அனிருத்துக்கு 5 கோடி ரூபாய்வரை வருமானம் வருகிறதாம். இதன் காரணமாக வெளிநாடுகளில் முகாமிடுவதை ரொம்பவே விரும்புகிறார் என்று திரைத்துறையிலிருந்து தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X