ரஜினி சார் ஃபார்முலா.. கமல் சார் ஃபார்முலா- ன்னு சினிமால இரண்டு இருக்கு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி அபார நடிப்பின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ளவர்.

ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லனாகவும் சிறப்பு தோற்றத்திலும் என எந்த ஒரு வேடம் கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிக்கக்கூடியவர்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி சினிமாவில் இரண்டு ஃபார்முலாக்கள் உள்ளன என கூறியுள்ளார்

வில்லன் கதாபாத்திரத்திலும்

வில்லன் கதாபாத்திரத்திலும்

நடிகர் விஜய் சேதுபதியின் அசாத்தியமான நடிப்பு திறமை அவரை பாலிவுட் வரையிலும் கொண்டு சென்றுள்ளது. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் என எது கிடைத்தாலும் அதை மிகச் சரியாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஜொலிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக உள்ளார். சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு அந்த படத்தை தயாரித்தும் இருப்பார்.

ஹிந்தியில் பிஸியாக

ஹிந்தியில் பிஸியாக

தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ஹிந்தியில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய வெப் சீரிஸில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மும்பைகர், மேரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்

இரு துருவங்களாக

இரு துருவங்களாக

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஃபகத் ஃபாஸில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்றதை அடுத்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக உள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்

இரண்டு ஃபார்முலாக்கள்

இரண்டு ஃபார்முலாக்கள்

சினிமாவில் கலை நோக்கத்துடன் எடுக்கப்படும் சினிமாக்கள் மற்றும் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்படும் சினிமாக்கள் என இரண்டு ஃபார்முலாக்கள் உள்ளன. அதில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் கலை நோக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் வியாபார நோக்கில் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும். ஒரு சினிமாவிற்கு கலையும் வேண்டும் வியாபாரமும் வேண்டும் அப்போதுதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். எனவே கமல் சார் ஃபார்முலா ரஜினிகாந்த் ஃபார்முலா என இரண்டும் கலந்த கலவைதான் ஒரு நல்ல சினிமா என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X