Dhanush - ரஜினியின் நண்பரால் தனுஷுக்கு நடந்த நல்லது என்ன தெரியுமா?

சென்னை: Shiva Rajkumar (சிவராஜ்குமார்) ரஜினியின் நண்பர் சிவராஜ்குமாரால் தனுஷுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அதிகரித்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் பத்தாம் தேதியை தீபாவளி போல் கொண்டாடினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும் அட்டகாசமாக இருந்ததால் அடுத்தடுத்த காட்சிகளில் படத்திற்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. இதன் காரணமாக வசூலிலும் முதல் நாளே ஜெயிலர் சாதனை படைத்தது.

There has been talk in Kollywood that Rajinis friend Shiva rajkumar has done a good thing for Dhanush

வசூல் சாதனை: முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை வசூலித்து பிற படங்களின் சாதனையை அடித்து நொறுக்கியது ஜெயிலர். தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாவது நாளிலேயே உலக அளவில் நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியது. நேற்றைய நிலவரம்படி ஜெயிலர் படமானது 350 கோடி ரூபாயை வசூலித்து வசூலில் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பான் இந்தியா ஸ்டார்கள்: இந்தப் படத்தின் மூலம் பந்தயம் அடித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார் ரஜினிகாந்த். அதன் காரணமாக படம் பான் இந்தியா அளவில் வெளியானது. மேலும் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என பிற மொழிகளில் இருந்தும் ஸ்டார்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களுக்கு சரியான ஸ்க்ரீன் ஸ்பேஸை நெல்சன் திலீப்குமார் வழங்கியிருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கூறினர்.

சிவா அண்ணா மாஸ்: மூன்று பேரில் படுபயங்கரமாக ஸ்கோர் செய்தது என்றால் சிவராஜ்குமார்தான். படத்தில் மொத்தமே இரண்டு காட்சிகளில் மட்டும் வரும் அவர் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸில் திரையரங்கில் அதகளம் செய்கிறார். அதனையடுத்து சிவராஜ்குமாரின் பிற கன்னட படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அவருக்கான க்ரேஸ் அதிகரித்துள்ளது.

கேப்டன் மில்லர்: ஜெயிலர் படத்தில் கமிட்டானபோதே சிவராஜ்குமார் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லரிலும் கமிட்டானார். ஜெயிலர் போல் இல்லாமல் அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். முக்கியமாக தனுஷுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலரில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து அப்ளாஸை அள்ளியவர் கேப்டன் மில்லரில் என்ன மாதிரியான சம்பவம் செய்திருக்கிறாரோ என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

படமும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியிருப்பதால் சிவராஜ்குமாருக்கான பல மாஸ் சீன்கள் இருக்கலாம் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஜெயிலர் வரும்வரை தனுஷுக்காக கேப்டன் மில்லரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இப்போது சிவராஜ்குமாருக்காகவும் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். எனவே இது கேப்டன் மில்லருக்கு போனஸ்தான். எப்படியோ ரஜினி நண்பரால் தனுஷுக்கு ஒரு நல்லது நடந்திருக்கிறது என திரை ஆர்வலர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X