நீங்க அடக்கமா இருக்கீங்களா? தாமரையிடம் எகிறிய சிபி... அதிகரிக்கும் விரிசல்.. அனல் பறக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பஞ்ச தந்திர டாஸ்க் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க் ஒவ்வொரு கட்டமாக இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இதனால் பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் ஒரு பிரச்சனை வெடித்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்ஸ்க்காக ஊர் விட்டு ஊர் வந்து டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

இசைவாணியின் ஆளுமை
இதில் கிராமத்தினர் நகரத்தினர் என இரண்டு குழுக்களாக ஹவுஸ்மேட்ஸ் பிரிந்துள்ளனர். இதிலும் முட்டல் மோதல்கள் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த வாரம் நெருப்புக் காயினின் ஆளுமையை பெற்றுள்ள இசைவாணி, தன்னுடைய பேச்சைதான் ஹவுஸ்மேட்ஸ் கேட்க வேண்டும் என கூறி வருகிறார்.

மூன்றாவது புரமோ
இதனால் வீட்டின் கேப்டனான மதுமிதாவுக்கும் இசைவாணிக்குமே மோதல் ஏற்பட்டுள்ளது இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரமோக்களில் தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பேச்சை மாற்றவே முடியவில்லை
இதில் பிக்பாஸ் வீடு விவாத மேடையாக மாறியுள்ளது. இதில் பட்டிக்காடா பட்டணமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இதில் பேசும் ராஜு அண்ணாச்சி நகரத்துக்காரராக உள்ளார். ஆனால் அவரது பேச்சை மாற்றவே முடியவில்லை, அதிகமாக அவர் பேசுவது யோ யோதான் என்று கூறுகிறார்.

நீங்க அடக்கமா இருக்கீங்களா?
அடுத்து பேசும் தாமரை செல்வி, துணிபோடுவதிலும் சரி கிராமம் போல் வரவே வராது என்கிறார். மேலும் நீ சேலம் தானே நீ துணி உடுத்துவது எனக்கு பிடிக்கவில்லை என்று ஸ்ருதியை குறிப்பிட்டு கூறுகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும் சிபி, டிரெஸ் போடுறது அவங்க இஷ்டம், நீங்க அடக்கமா இருக்கீங்களா என கேட்கிறார்.

அடக்கம் இல்லாம என்னத்த பாத்தீங்க?
பின்னர் டைனிங் ஏரியாவில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் சிபி. அப்போது அங்கு செல்லும் தாமரை, என்கிட்ட அடக்கம் இருக்கான்னு கேட்டீங்கல்ல.. நான் அடக்கம் இல்லாம என்ன சாமி பண்ணேன், அடக்கம் இல்லாம என்னத்த பாத்தீங்க என கேட்கிறார். அப்போது தாமரையை சமாதானப்படுத்துகிறார் அபினய். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.

இன்னைக்கும் இருக்கு?
இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்போ இன்னைக்கும் எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கிறது போல என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், இவர்கள் போடும் புரமோவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











