Don't Miss!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Finance
பிளாஸ்டிக் தடையால் அடித்தது ஜாக்பாட்: ஆனால் காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அஜித்-ஷாலினி கல்யாணத்தில் நடந்த பிரச்சனை.. கடைசியில் நடந்தது என்ன இயக்குனர் பேரரசு விளக்கம்!
சென்னை : தமிழ் சினிமாவில் நட்சத்திர கப்புலாக உள்ளவர்கள் அஜித் மற்றும் ஷாலினி
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
இந்த நிலையில் அஜித் ஷாலினி காதல் திருமணத்தில் நடந்த தொடர் பிரச்சனைகள் குறித்து இயக்குனர் பேரரசு தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் விளக்கமாக பேசியுள்ளார்.
கேரள நடிகை மர்மமான முறையில் மரணம்...கொலையா? கணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஹாலிவுட் தரத்தில்
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் போனி கபூரின் மிக பிரம்மாண்ட தயாரிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகளில் வியக்கவைக்கும் பைக் ரேஸ் காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் பிரம்மிக்க வைத்த வலிமையைத் தொடர்ந்து மீண்டும் ஹெch வினோத் இயக்கத்தில் அஜித் 61வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62வது திரைப்படம் உருவாக உள்ளது.

காதலித்து திருமணம்
2000ஆம் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் கலக்கி கொண்டிருந்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்அஜித் . பெரும் போராட்டத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து அமர்க்களம் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ஷாலினி.சரண் இயக்கத்தில் அஜித் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்த அமர்க்களம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில் அமர்க்களம் படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மூன்று நாட்கள் மட்டும் பேலன்ஸ்
இந்நிலையில் அஜித், ஷாலினி திருமணத்தில் நடந்த தொடர் பிரச்சனைகள் குறித்து இயக்குனர் பேரரசு தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு ஷாலினி இனி படங்களில் நடிப்பதில்லை என தானே முடிவெடுத்து இருந்தாராம். அதனால் அப்போது ஒப்பந்தமாகி இருந்த பிரியாத வரம் வேண்டும் படத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடிக்க வேண்டிய காட்சிகள் பேலன்ஸ் இருந்ததாம். ஆனால் நடிகர் பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

3 முறை தள்ளிப்போன திருமண தேதி
பிரியாத வரம் வேண்டும் படத்தில் இருந்த மூன்று நாள் காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவில் இருந்த ஷாலினி ஜனவரி மாதம் திருமணம் வைக்க இருந்து அதன் பிறகு 3 முறை தொடர்ந்து தேதிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பொறுமை இழந்தவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு படப்பிடிப்பை சீக்கிரம் நடத்தி முடிக்குமாறு வேண்டுகோள் வைத்ததற்கு இணங்க மீதமுள்ள காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. ஜனவரியில் திருமணம் செய்ய இருந்தா ஷாலினி பிரியாத வரம் வேண்டும் படத்தால் ஏப்ரல் மாதம் தான் திருமணம் நடைபெற்றது என அஜித் ஷாலினி திருமணத்தில் நடந்த பிரச்சனை குறித்து இயக்குனர் பேரரசு பகிர்ந்துள்ளார்.