Don't Miss!
- News
பயங்கர குழப்பம்.. அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும்.. அடித்துச் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அவதார் 2 தமிழில் வெளியாவதில் திடீர் சிக்கல்… அதிருப்தியில் ஹாலிவுட் ரசிகர்கள்!
சென்னை: 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.
வசூலில் மட்டும் இல்லாமல் ஆஸ்கர் உட்பட ஏராளமான சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றிருந்தது.
இந்நிலையில் அவதார் இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவதார் பட ரிலீஸ் பற்றி ஜேம்ஸ் கேமரூன் போட்ட அதிரடி ட்வீட்.. ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் உறுதி!

எதிர்பார்ப்பில் அவதார்
ஹாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். உலக அளவில் வசூலில் பிரம்மாண்டமான சாதனை படைத்த இந்தப் படம், ஆஸ்கர் போட்டியிலும் பல விருதுகளை வென்று அசத்தியிருந்தது. இதனையடுத்து அவதார் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதன்படி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவதார் செகண்ட் பார்ட் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல்
அவதார்- தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இரண்டாம் பாகம் டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அவதார் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் டப்பிங்கில் வெளியிடும் விநியோக நிறுவனம், திரையரங்குகளிடம் இருந்து 70 சதவீத தொகையை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், இந்த பிரச்சினை தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குழப்பத்தில் ரசிகர்கள்
அவதார் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் கண்டிப்பாக இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு அவதார் சொன்ன தேதியில் வெளியாகும் என்றும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப் படம். ஏற்கனவே அவதார் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

160 மொழிகளில் ரிலீஸ்
ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இந்த பாகத்தை இயக்கியுள்ளார். 13 வருடங்கள் ரசிகர்கள் காத்திருந்ததற்கு தரமான விஷுவல் ட்ரீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவதாரில் இருக்கும் உயிரினங்கள் மனிதர்களிடமிருந்து தங்கள் உலகத்தை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதே கதையாக விரிகிறது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தில் நீருக்கடியில் சூட்டிங் செய்யும் டெக்னாலஜியை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவதார் செகண்ட் பார்ட்டுடன், 3ம் பாகத்தையும் சேர்த்தே இயக்கிவிட்டார் ஜேம்ஸ் கேமரூன், இந்தத் திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸாகிறது.