போகிற போக்கைப் பார்த்தால் நயன்தாராவை சிஎம் ஆக்கிடுவாங்க! - பிரபல இயக்குநர் அதிரடி
Recommended Video

தமிழக அரசியலிலும் சினிமாவிலும் தினமும் பல அதிரடிகள் நடந்து வருகின்றன. யாராவது ஒரு நடிகர் அரசியல் ஸ்டேட்மென்ட் விடுகிறார். கமல் ஹாஸன் அரசியலில் குதித்து விட்டேன் என அறிவித்துள்ளதோடு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தையும் அறிவித்துவிட்டார்.
ரஜினிகாந்த் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய், விஷால் ஆகியோருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
நடிகைகளில் நயன்தாராவுக்கு சமூக அக்கறை, அரசியல் ஆர்வம் இருப்பதாகவே தெரிகிறது. சமீப காலமாக அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால் புரியும்.
முன்னணி நடிகர்களோடு டூயட் பாடிக் கொண்டிருந்த நயன்தாரா, இப்போது அதற்கு பை சொல்லிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மாயா, டோரா, இப்போது அறம், அடுத்து இமைக்கா நொடிகள் என அவர் வேறு ரூட் பிடித்துவிட்டார்.

குறிப்பாக அறம் படத்தில் அவர் அரசியல் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. படம் முழுக்க மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசியிருப்பதால், இந்தப் படத்துக்குப் பிறகு நயன்தாராவின் படங்களின் நிறமே மாறிவிடும் என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரபல இயக்குநர் ஈ ராமதாஸ், "அறம் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான கருத்துக்களை படத்தில் வைத்திருக்கிறார்கள். காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
இன்றைக்கு நடிகர்கள் பலரும் அரசியல் களத்தில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் நயன்தாராவின் சமூக அக்கறையைப் பார்க்கும்போது அவர் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் போலத் தெரிகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது அவர் முகத்தை மறைத்தபடி மெரீனாவுக்குப் போய் மக்களுடன் மக்களாக இருந்தது நினைவிருக்கலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் நயன்தாராவை முதல்வராக்கினாலும் ஆச்சர்யமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











