எனக்கும் வெற்றிமாறனுக்கும் தான் கடும் போட்டி... எந்த விஷயத்தில் என்பது தான் ஆச்சரியம்

சென்னை : இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு உள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் குமார் அசுரன் படத்தில் அசுரத்தனமான இசையை கொடுத்திருப்பார்

இப்பொழுது வெற்றிமாறனின் உதவியாளர் மதி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செல்ஃபி படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ் அந்த விஷயத்தில் வெற்றிமாறனுக்கு தான் போட்டி என கலகலப்பாக பேசியுள்ளார்.

ஹீரோவாக நடிப்பு அவதாரம்

ஹீரோவாக நடிப்பு அவதாரம்

தனது ஒவ்வொரு படங்களையும் வெற்றிப்படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளவர் ஜிவி பிரகாஷ்குமார். ஒவ்வொரு படங்களிலும் வெறித்தனமான இசையை கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். டார்லிங் படத்தில் ஹீரோவாக நடிப்பு அவதாரம் எடுத்த ஜிவி அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து இப்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்

வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் கூட்டணி

வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் கூட்டணி

மற்ற இயக்குனர்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டு வழக்கமாக இசையமைக்கும் இயக்குனர்களுக்கும் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மட்டுமே ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணைந்த அசுரன் திரைப்படத்தில் இவரது இசை அனைவராலும் பாராட்டப்பட்டது

செல்ஃபி

செல்ஃபி

வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் இணையும் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் இந்த நிலையில் வெற்றிமாறனின் உதவியாளர் மதி மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் செல்ஃபி. கல்லூரி கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செல்ஃபி ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

Recommended Video

தன்னுடைய அடையாளத்தை தன் மகன் பின்னால் வைப்பது சந்தோசம் Aari speech Takku Mukku Tikku Press Meet
எனக்கும் வெற்றிமாறனுக்கும் போட்டி

எனக்கும் வெற்றிமாறனுக்கும் போட்டி

இந்த நிலையில் செல்ஃபி பட விழாவில் பேசிய ஜி வி பிரகாஷ் குமார் தனக்கும் வெற்றிமாறனுக்கு மதி மாறனுக்கும் தாடி வளர்ப்பதில் மிகப்பெரிய போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் நானும் வெற்றிமாறனும் மட்டும் அதிகமாக தாடி வைத்துள்ளோம். வெற்றிமாறன் என்னை விட கொஞ்சம் தாடி அதிகமாகவே வைத்துள்ளார் என வெற்றிமாறனை கலாய்த்து ஜிவி பிரகாஷ்குமார் பேசிய கலகல பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜிவி பிரகாஷ் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் வாடிவாசல் படத்தில் இணைந்துள்ளது இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X