எதுவும் திருப்தி இல்லை... ரஜினிக்காக கதை கேட்கும் லைகா... இயக்குநரை முடிவு செய்வதில் குழப்பம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமன்னாவும் இதில் நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜெயிலரை தொடர்ந்து லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் லால் சலாம் உட்பட மேலும் ஒரு படத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தலைவர் 171 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டைரக்டர் யார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினி புதிய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 ஜெயிலரில் இணைந்த தமன்னா

ஜெயிலரில் இணைந்த தமன்னா

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், புஷ்பா பட வில்லன் மங்களம் சீனு ஆகியோர் கமிட் ஆகியுள்ள நிலையில், கடைசியாக தமன்னாவும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

 தலைவர் 171 அப்டேட்

தலைவர் 171 அப்டேட்

ஜெயிலர் முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோர் ரோலில் நடிக்கிறார் ரஜினி. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ரஜினியுடன் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் கேரக்டர்களில் நடிக்கின்றனர். லால் சலாம் உட்பட லைகா தயாரிக்கும் மேலும் ஒரு படத்திலும் ரஜினி நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ரஜினியின் 171வது படமான இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைரக்டர் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 சூர்யா பட இயக்குநர்?

சூர்யா பட இயக்குநர்?

தலைவர் 171 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் சிபி சக்கரவர்த்தி அல்லது பிரதீப் ரங்கநாதன் இயக்கலாம் என சொல்லப்பட்டது. இதனால் இளம் இயக்குநர்களுடன் ரஜினி கூட்டணி சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென வாசு தான் தலைவர் 171 டைரக்டர் என செய்திகள் வெளியாகின. சந்திரமுகி மூலம் மெஹா ஹிட் கொடுத்த பி வாசு, மீண்டும் ரஜினிக்காக கதையுடன் காத்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ஜெய்பீம் மூலம் பிரபலமான தசெ ஞானவேல் தான் ரஜினியை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

 லைகா முடிவு தான் பைனல்

லைகா முடிவு தான் பைனல்

ஞானவேல் சொன்ன கதைக்கு ரஜினி ஓக்கே சொல்லிவிட்டதாகவும், அதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வேறு சில இயக்குநர்களிடம் கதை கேட்டுப் பார்க்கலாம் என லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். எனவே தலைவர் 171 படத்துக்கான கதை, இயக்குநர் இரண்டையும் லைகாவே பைனல் செய்யட்டும், அதுவே எனது முடிவு என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X