லியோ ஆயிரம் கோடி வசூல் வாய்ப்பே இல்லை ராஜா.. விஜய் ரசிகர்கள் கனவில் மண்ணள்ளிப் போட்ட ரமேஷ் பாலா!
சென்னை: ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் முறியடிக்கும், 1000 கோடி வசூல் செய்யும் என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் பேசாமல் இருப்பதே நல்லது என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கரான ரமேஷ் பாலா பேட்டி ஒன்றில் பேசி பகீர் கிளப்பி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரியளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை. அதே போல நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் இந்த ஆண்டு வெளியான வாரிசு என நடிகர் விஜய்யின் மார்க்கெட் 200 முதல் 300 கோடியாகவே உள்ளது.

நடிகர் விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி என சிலர் பில்டப் கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. இந்நிலையில், லியோ படம் பெரியளவில் பிசினஸ் செய்து ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும் தமிழ் சினிமாவின் புதிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறும் என விஜய் ரசிகர்கள் பலத்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
லியோ 1000 கோடி வசூல் சாத்தியமா?: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமே பாலிவுட் பெல்ட்டில் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. தமிழ் சினிமாவின் ரியாலிட்டி இன்னமும் இப்படித்தான் உள்ளது. ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சம் 600 கோடி வரை வசூல் குவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதை லியோ படம் தாண்டுமா என்பதே சந்தேகம் தான். கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை லியோ படம் பெற சாத்தியமே இல்லை. விஜய் ரசிகர்கள் மட்டுமே அப்படி சொல்லிக் கொண்டு வருகின்றனர். அதற்கான வாய்ப்பே இல்லை என ரமேஷ் பாலா கூறியுள்ளார்.
வாய்ப்பே இல்லை ராஜா: கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி உள்ளிட்ட படங்கள் தான் தென்னிந்தியாவில் மட்டும் ஓடாமல், இந்தி பெல்ட்டிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்தன. அதே போல சீனா உள்ளிட்ட ஓவர்சீஸ்களிலும் அந்த படங்கள் நல்ல வசூல் செய்தது தான் 1000 கோடி வசூலுக்கு சாத்தியம் ஆனது.
சஞ்சய் தத் இருப்பதால், இந்தி பெல்ட்டில் லியோ படம் வசூல் சாதனை செய்யுமா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு படம் பவர்ஃபுல்லான கன்டென்ட் இருக்கணும். இந்தி ரசிகர்கள் தங்கள் படமாகவே லியோவை பார்த்தால் தான் அதற்கு வாய்ப்பு இருக்கு ஆனால், அது ரொம்ப கஷ்டமப்பா எனக் கூறி விஜய் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











