இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்? பரபரப்பு தகவல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியளார் யார் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது,
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேறுவது வாடிக்கையான ஒன்று.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் சிலர் சக ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படுவார்கள்.

5 பேர் நாமினேஷன்
அவர்களில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர்.

செங்கோலால் தட்டியதை
அவர்களில் 5 பேருமே முக்கியப் போட்டியாளர்களாக பார்க்கப்படும் நிலையில், யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சுரேஷ் சக்கரவர்த்தி சனம் ஷெட்டியை செங்கோலால் விளையாட்டுக்கு தட்டியதை அவர் பெரும் பிரச்சனையாக்கினார்.

ஸ்கோர் செய்த சுரேஷ்
போடா வாடா என மரியாதை குறைவாக பேசிய போதும் தான் செய்த அவறுக்காக வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்தார். மேலும் தான் செய்த தவறை உணர்ந்து தன்னை வெளியேற்றும் படியும் கூறினார் சுரேஷ்.

வெறுப்புக்கு ஆளாகும் பாலாஜி
இதனால் சுரேஷ் சக்கரவர்த்தி மீதான மதிப்பும் மரியாதையும் ரசிகர்கள் மத்தியில் கூடியது. அதே நேரத்தில் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு பேர்வழி என்ற பெயரில் பலரையும் காயப்படுத்தி வருகிறார் பாலாஜி முருகதாஸ். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களின் வெறுப்புக்கு ஆளாகி வருகிறார் பாலாஜி.

பாலாஜி சேவ்டு
அதேநேரத்தில் அவருக்கும் சனம் ஷெட்டிக்கும் இப்போதுதான் ஒரு சாஃப்ட் கார்னர் உருவாகி வருகிறது. இது சுவாரசியமான கன்டென்ட்டை கொடுக்கும் என்பதால் அவ்வளவு சீக்கிரம் அந்த ஜோடியை பிரிக்க மாட்டார்கள். இதனால் பாலாஜி முருகதாஸ் காப்பாற்றப்பட்டார்.

நோ எவிக்ஷன்
அவரைப் போல ஆஜ்த்தும் நேற்றைய எபிசோடில் காப்பாற்றப்பட்டார். எஞ்சியுள்ள அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஆரி ஆகியோரில் யார் வெளியே போகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் ஏதும் இல்லை என நம்ப தகுந்த வட்டாராத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











