என்ன பிக்பாஸ்.. நாமினேஷன்லாம் பண்ண சொல்லி கடைசியில புஸ்வாணமாக்கிட்டீங்க.. அப்போ சண்டையிருக்காதா!
சென்னை: ஹவுஸ்மெட்டுகளை நாமினேட் செய்ய வைத்து கடைசியில் எல்லாத்தையும் புஸ்வாணமாக்கிவிட்டார் பிக்பாஸ்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியெறினார்.

யார் வெளியேறுவார்?
இதனால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷன் புராசஸில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவார்கள் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது.

வெடியான ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கார்டன் ஏரியாவில் ஒவ்வொரு போட்டியாளரின் போட்டோ ஒட்டப்பட்ட வெடி போன்ற டிசைனில் மணல் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

காரணத்துடன் நாமினேஷன்
ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷன் செய்யும் போட்டியாளரின் வெடி போன்ற டிசைனில் இருந்து மணலை கொண்டு வந்து நடுவில் இருந்த புஸ்வாணம் போன்ற ஒன்றில் கொட்ட வேண்டும். அதன்படியே ஹவுஸ்மேட்ஸ் தலா இரண்டு போட்டியாளர்களை உரிய காரணத்துடன் நாமினேட் செய்தனர்.

பட்டியலை வாசித்த பிக்பாஸ்
கடைசியில் போட்டியாளர்களை கார்டன் ஏரியாவுக்கு அழைத்த பிக்பாஸ், இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் என பட்டியலை வாசிக்க தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு பிறகு அனைத்து போட்டியாளர்களின் பெயரும் வருவதை உணர்ந்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமேவா என ஆச்சரியப்பட்டனர்.

தல தீபாவளி
கடைசியாக ஆஜித்தின் பெயரை சொல்லி முடித்த பிக்பாஸ், மற்றும் தீபாவளி வாழ்த்துகள் என்றார். மேலும் இந்த தீபாவளி பிக்பாஸ் வீட்டின் தல தீபாவளி என்பதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் இல்லை என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

புஸ்ஸான நாமினேஷன்
தொடர்ந்து ஆரியை அழைத்த பிக்பாஸ், நடுவில் உள்ள புஸ்வாணத்தை கொளுத்த சொல்லி நாமினேஷன் புஸ்ஸாகிவிட்டதாக மறைமுகமாக கூறினார். ஆரி புஸ்வாணத்தை கொளுத்த தீபாவளி நீதான்டி பாடலை போட்டு விட்டு ஆட்டம் போட வைத்தார்.

நோ நாமினேஷன்
பிக்பாஸின் நோ நாமினேஷன் அறிவிப்பால் ஹேப்பியான ஹவுஸ்மேட்ஸ், செம ஆட்டம் போட்டு தீபாவளியை கொண்டாட தொடங்கினர். ஆனால் இந்த வாரம் நாமினேஷனுக்கு வந்தால் ஒரு சிலரை வச்சு செய்யலாம் என காத்திருந்தனர் ரசிகர்கள்.

சண்டை இருக்காதா?
கடைசியில் பிக்பாஸின் புஸ்வாண அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். மேலும் நாமினேஷன் இல்லை என்பதால் யாரும் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்களா என்று கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இந்த வாரம் யாரும் ஓட்டுக்காக கண்ணீர் விடமாட்டார்கள் என நிம்மதியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











