twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் மர்ம மரணம்.. கொலைக்கான ஆதாரங்கள் சிக்கியதா? சிபிஐ அதிகாரிகள் பரபரப்பு!

    |

    மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யோக பேட்டி அளித்துள்ளனர்.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

    இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    34 வயதே ஆன இளம் நடிகரான சுஷாந்தின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் உள்ள கேங்க் அரசியலே என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    இதற்காக பாலிவுட் வாரிசு நடிகர் நடிகைகளையும் ரசிகர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும் சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    கிடுகிப்பிடி விசாரணை

    கிடுகிப்பிடி விசாரணை

    சிபிஐ அதிகாரிகள், சுஷாந்த் வீட்டின் சமையல்காரர்களான நீரஜ் சிங், தீபேஷ் சாவந்த் மற்றும் நண்பரான சித்தார்த் பிதானி உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியிடமும் அவரது குடும்பத்தாரிடமும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையா?

    கொலையா?

    இந்நிலையில் சுஷாந்த் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் ஒரு குழுவை சேர்ந்த 3 பேர் இந்தியா டுடே ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அதில், சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் விசாரணைக் குழு இதுவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை கோணத்தில்

    தற்கொலை கோணத்தில்

    இருப்பினும், விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ அதிகாரிகள் தற்கொலை கோணத்தில் விசாரித்து வருவதாகவும், தற்கொலைக்கு உதவும் வகையில் ஒரு வழக்கை உருவாக்க முடியுமா என்று ஆய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ரியாவிடம் விசாரணை

    ரியாவிடம் விசாரணை

    குற்றம் நடந்த இடத்தை சிபிஐ விரிவாக புனரமைத்துள்ளது. மும்பை காவல்துறையினர் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் பார்த்து, இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபர்களை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் ரியா சக்ரவர்த்தியும் அடங்குவார்.

    சுஷாந்த் மரணம் கொலை

    சுஷாந்த் மரணம் கொலை

    விசாரணையை நடத்தும் குழுவினரின் கூற்றுப்படி, தடயவியல் அறிக்கைகள், முக்கிய சந்தேக நபர்கள் அளித்த தகவல்கள அல்லது குற்றம் நடந்த இடத்தை புனரமைத்தல் ஆகியவை சுஷாந்தின் மரணம் ஒரு கொலை என்று தெரிவிக்கவில்லை.

    பிரேத பரிசோதனை அறிக்கை

    பிரேத பரிசோதனை அறிக்கை

    எய்ம்ஸ் தடயவியல் குழு சமர்ப்பித்த அறிக்கை விசாரணையின் அடுத்த முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் உண்மைத் தன்மை தெரியவரும். இதுவரை கொலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    English summary
    There is no proof for Sushant's death is a murder says CBI. But the probe of Sushant death is still is on they said in a media exclusive.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X