சினிமா துறையில் பலாத்காரமே இல்லை, சம்மதத்துடனே நடக்கிறது: நடிகை பகீர் தகவல்
மும்பை: சினிமா துறையில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் பிக் பாஸ் 11 டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டே.
இந்தி தொலைக்காட்சி தொடரில் அண்ணியாராக நடித்து பிரபலமான ஷில்பா ஷிண்டே பிக் பாஸ் 11 டைட்டிலை வென்றார். அவர் பாலிவுட்டில் நடக்கும் மீ டூ பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
மீ டூ பற்றி ஷில்பா ஷிண்டே கூறியிருப்பதாவது,

சம்பவம்
சுத்த அபத்தமானது. சம்பவம் நடக்கும் போதே அது குறித்து பேச வேண்டும். அதை விட்டுவிட்டு பல ஆண்டுகள் கழித்து பேசுவதில் பலன் இல்லை. சம்பவம் நடந்து வெகு காலம் கழித்து பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள். உடனுக்குடன் செயல்பட வேண்டும். அதற்கு அதிகாரம் வேண்டும். சினிமா துறை நல்லதும் கிடையாது, மோசமும் கிடையாது.

புகார்
எல்லா இடங்களிலும் அனைத்தும் நடக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் அனைவரும் சினிமா துறையின் பெயரை கெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சினிமா துறையில் இருக்கும் அனைவரும் தவறானவர்களா? நிச்சயம் இல்லை. எல்லாமே நம்மை பொருத்தது. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.

சம்மதம்
சினிமா துறையில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இரு தரப்பு சம்மதத்துடன் தான் நடக்கிறது. இதையே தான் நான் முன்பும் தெரிவித்துள்ளேன். அவர்கள் சொல்வது போன்று செய்ய பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவது தானே. அதை விட்டுவிட்டு புகார் தெரிவிப்பது சரி இல்லை என்கிறார் ஷில்பா ஷிண்டே.

ஆலோக் நாத்
பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கை தனக்கு போதைப் பொருள் கொடுத்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஆலோக் நாத் தன்னை பலாத்காரம் செய்ததாக இயக்குனர் வின்டா நந்தா கூறினார். இந்நிலையில் ஷில்பா ஷிண்டே இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











