நான் பைத்தியக்காரியா? அப்போ நீங்க யாரு? பிக்பாஸில் எல்லாமே பொய்.. கொந்தளித்த போட்டியாளர்!
சென்னை: பிக் பாஸ் 9 போட்டியாளர்களில் ஒருவரான நந்தினி, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது, என்னிடம் ஸ்டஃப் இல்லை என்று கூறி அழுது ஆர்பாட்டம் செய்தார். நந்தினியின் நடவடிக்கைகளை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் மட்டுமில்லாமல், பிக் பாஸ் பார்வையாளர்களும் பயந்தனர். இதையடுத்து, இணைவாசிகள் அனைவரும் நந்தினியின் மனநிலையை சரியில்லை என கூறிவந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து தற்போது நந்தினி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில். பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர் நந்தினி நான். அனைவரும் என்னை மறந்து இருப்பீர்கள். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நான்கு நாட்களிலேயே அந்த வீட்டில் ரியாலிட்டி இல்லை என்று வெளியில் வந்தேன். இன்னைக்கு அதை நினைக்கும் போது நான் பெருமையாக நினைக்கிறேன். மன உளைச்சலுக்கு ஆளாகிய, எனக்கு கேரியரே இல்லாமல் போய்விட்டது, வெளியே பார்க்கும் பலர், நீ பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டே இருக்க, சண்டை போட்டுக்கிட்டே இருக்க என்கிறார்கள். இதை நாங்களா செய்யவில்லை, பண்ண வைக்கிறாங்க.
பைத்தியக்காரி நான் என்றால், பண்ண வைக்கிற அவங்கனை என்னவென்று சொல்வது, எனக்கு கவுன்சிலிங் தேவையில்லை. அவங்களுக்கு தான் கவுன்சிலிங் தேவை.

கேவலமான ஷோ: நான் ஒரு தொகுப்பாளினி, நான் எங்க போனாலும், பிக் பாஸ் வீடியோ பார்த்தேன், நீங்க ஸ்டேபிளா இல்ல என்கிறார்கள். எனக்கு பைத்தியக்காரி என்கிற பட்டத்தை கட்டி வெளியில் அனுப்பி இருக்காங்க, நான் வெளியில் வந்த பிறகும் எந்த ஒரு ரெஸ்பான்சும் எனக்கு கொடுக்கல. பிக் பாஸ் வீட்டிற்குள் போன 4 நாளிலேயே இங்கு ரியாலிட்டி இல்லை என்று சொல்லிவிட்டு கெத்தா வெளியில் வந்தேன். உண்மையாகவே பிக் பாஸ் வீட்டில் ரியாலிட்டி கிடையவே கிடையாது. ஷோவில், சாண்ட்ரா எப்போதும் அழுதுக்கிட்டு இருக்காங்க, பிரஜன் போகும்போது வெளியே போனாங்க, ரம்யா ஜோ, விஜய் சேதுபதி முன்பே நான் வெளியில் போகிறேன் என்று சொன்னாங்க அவங்களை ஏன் வெளியில் அனுப்பவில்லை. யார் வெளியே போகவேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணித்தான் வெளியில் அனுப்புவாங்க. என்னை எந்த சதியோடு வெளியில் அனுப்பினாங்க என்று எனக்கு அவங்க பதில் சொல்ல வேண்டும். இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்து ரொம்ப பீல் பண்றேன்.
நான் இந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு காரணம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இல்லை, அந்த வீட்டில் பல பேர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இன்னைக்கு பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள். சண்டை நடக்கும் போதே பிக் பாஸ் அதை தடுத்தி இருக்கலாமே, பிக் பாஸ் நிகழ்ச்சியை எடிட் செய்து தான் போடுகிறார்கள். அவர்கள் எது வெளியில் தெரிய வேண்டும் என நினைக்கிறார்களோ அவை மட்டும் தான் வெளியில் தெரியும் என்று நந்தினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











