பாலாஜிக்கு இப்போ வரைக்கும் ரெட் கார்டு கொடுக்கல.. ஒருவேளை அப்படி வச்சு செய்யப்போறாங்களோ?!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இப்போது வரை அதுபோன்று எதுவும் நடக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் டபுள் கேம் ஆடி வருகிறார்.

தனக்கு பிடித்தவர்களை கேப்டனாக்கி தனது காரியத்தை கச்சிதமா முடித்து வருகிறார்.

பாலாஜி பாலிட்டிக்ஸ்

பாலாஜி பாலிட்டிக்ஸ்

பாலாஜியின் ஆதரவோடு கேப்டனாகும் போட்டியாளர்களும் அவர் கொடுக்கும் கீக்கு ஏற்றதுபோல் ஆடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் பாலாஜி செய்யும் பாலிட்டிக்ஸ் பளீச்சென தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பாலாஜி.

அட்ஜெஸ்ட்மென்ட்

அட்ஜெஸ்ட்மென்ட்

சனம் ஷெட்டியை சமீபத்தில் தறுதலை அவளே இவளே என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு முன்பாகவே சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் செய்துதான் அழகிப் பட்டத்தை பெற்றார் என கூறியுள்ளார் பாலாஜி.

கேரக்டரை அசிங்கப்படுத்தி

கேரக்டரை அசிங்கப்படுத்தி

இந்த விஷயம் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த கோர்ட் டாஸ்க்கின் போது சனம் எழுதிய புகார் கடிதத்தின் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்தும் வகையில் பேசிய பாலாஜியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர்.

ஏதாவது நடக்குமா?

ஏதாவது நடக்குமா?

ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் பாலாஜியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும். பாலாஜி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் நேற்று கமல் பங்கேற்ற எபிசோடில் ஏதாவது நடக்குமா என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

கமல் எச்சரிக்கலாம்

கமல் எச்சரிக்கலாம்

தறுதலை விவகாரத்தை கையிலெடுத்த கமல், சிரித்துக் கொண்டிருந்த பாலாஜியை சிரிக்காதீங்க என விளாசினார். அந்த வார்த்தையை பலரும் பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்தியதாகவும் சாடினார். இன்றும் இதன் தொடர்ச்சியாக கமல் எச்சரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் வீட்டுக்குள்தான்

இன்னும் வீட்டுக்குள்தான்

ஆனால் பாலாஜி வெளியேற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகியிருப்பதாக கூறியிருக்கும் சில நம்ப தகுந்த வட்டாரங்கள், பெண்ணை அவதூறாய் பேசி அவமானப்படுத்திய பாலாஜி இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள்தான் இருப்பதாக கூறியுள்ளனர்.

சென்சிட்டிவான பிரச்சனை

சென்சிட்டிவான பிரச்சனை

ஒருவேளை இது ரொம்பவே சென்சிட்டிவான பிரச்சனை என்பதால் வார நாட்களில் அவரை திடீரென வெளியேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்றிருந்த சரவணன், தனது கல்லூரி நாட்களில் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறினார்.

கண்களை கட்டி

கண்களை கட்டி

அதற்காக மக்கள் மத்தியில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டார் சரவணன். ஆனாலும் அதனை ஏற்காமல் அவரை ஒரு கொலைக் குற்றவாளியைபோல் கண்களை கட்டி கன்ஃபெஷன் ரூமில் இருந்து நேரடியாக வெளியே அழைத்து செல்லப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்.

ஆட்டத்தை தொடருவார்களா?

ஆட்டத்தை தொடருவார்களா?

அதுபோல் ஏதாவது பாலாஜி விவகாரத்தில் நடக்க உள்ளதா? அல்லது போனது போகட்டும் டிஆர்பி வந்தால் போதும் என அப்படியே விட்டுவிட்டு பாலாஜியை வைத்தே ஆட்டத்தை தொடரப் போகிறார்களா என்பது வரும் நாட்களில் தெரியும்.

எப்படி கையாளப்போகிறார்?

எப்படி கையாளப்போகிறார்?

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தொடர கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவறு என்றால் தட்டிக்கேட்பேன், சரி என்றால் தட்டிக் கொடுப்பேன் என டேக் லைன் பேசும் கமல், இந்த விஷயத்தை எப்படி கையாளப்போகிறார்? அவர் மீதான நம்பிக்கையை காப்பாற்றுவாரா அல்லது நிகழ்ச்சி குழுவின் போக்கிலேயே போவாரா என்பதும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X