ஆஸ்கார் விருது பெற குறுக்குவழியா? தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் நச் பதில்!

சென்னை : ஆஸ்கார் விருதை பெற எந்த குறுக்குவழியும் இல்லை என்று தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

95வது ஆஸ்கார் விருது விழாவில், இந்தியா புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்து, கார்த்திகி கொன்சால்வ் இயக்கியிருக்கும் "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம், சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை வென்றுள்ளது.

இதன் மூலம், ஆவணப்பட வரிசையில் ஆஸ்கர் வென்ற முதல் இந்திய படம் என்ற சரித்திரத்தை இத்திரைப்படம் படைத்து இருக்கிறது. ஆஸ்கார் விருதை வென்ற இரண்டு பெண்களுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்

இந்நிலையில், ஆஸ்கார் விருதை பெற்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடல் என மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் நுழைந்தது மிகப்பெரிய விஷயமாகும். பல வருட உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதைபார்க்கிறேன் நான் பார்க்கிறேன்.

நிதி உதவி இல்லை

நிதி உதவி இல்லை

ஆவணப்படங்கள் எடுப்பது நீண்ட காலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல இளைஞர்கள் பல வித்தியாசமான கதைகளுடன் ஆவணப்படத்தை எடுக்க முன்வருகிறார்கள். இந்தியாவில் ஆவணப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும், ஆவணப்படம் எடுப்பதற்கான போதுமான நிதி உதவி கிடைக்காதால், ஆவணப்படங்களை எடுக்க பலர் முன்வருவதில்லை.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் உருவான கதை

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் உருவான கதை

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தமிழ்நாட்டின் உள்ள முதுமலை புலிகள் சரணாலயத்தை வீடியோவாக உருவாக்கி நெட்ஃபிக்ஸ்க்கு அனுப்பினார். அவர்கள், என்னை அணுகினார்கள். அந்த வீடியோவைப்பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகு எங்களின் மூன்றரை வருட பயணத்தில் கிடைத்தது தான் ரகு மற்றும் அம்மு யானையின் கதை.

குறுக்கு வழிகள் இல்லை

குறுக்கு வழிகள் இல்லை

மேலும், ஆஸ்கார் விருதை வெல்ல குறுக்கு வழிகள் இருப்பதாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் குனீத் மோங்கா, எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் இருந்து, படம் இடைவிடாமல் திரையிடப்பட்டுக்கொண்டே இருந்தது. நெட்ஃபிக்ஸ் படம் இருந்தால், அனைவரும் படத்தைப் பார்க்கவும் பேசவும் வைத்தது. இதற்காக நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், ஆஸ்கார் விருதை வெல்ல யாரிடமும் எந்த குறுக்கு வழியும் இல்லை, ஆஸ்கார் கதவை திறக்க சாவியும் இல்லை என்பதை அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஆர்ஆர்ஆர் படத்திற்காக இயக்குனர் ராஜமௌலி 300 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த படத்தின் மூலம் எப்படியாவது ஹாலிவுட்டில் பிரபலமாகி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஸ்கர் விருதை பெற பல கோடி வரை செலவு செய்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கூறியுள்ளது, மிகப்பெரிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X