எனக்கும் கவினுக்கும் செட் ஆகல பிரிஞ்சிட்டோம்... நடிகை லாஸ்லியா பிரேக்கப் குறித்து ஓபன் டாக்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா
ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இப்பொழுது தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலித்த லாஸ்லியா இப்பொழுது இருவருக்கும் செட் ஆகல அதனால பிரிந்துவிட்டோம் என பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பலருக்கும் பிடித்துப் போனார். நடிகர் கமல்ஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஒரு சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்ற இவர் அழகில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகச் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை அளித்தனர்

கவினுடன் காதல்
லாஸ்லியா ஒரு பெண்ணாக இருந்தபோதும் கவின், சாண்டி, முகின் ராவ், தர்ஷன் என ஆண்கள் மத்தியிலும் மிக சகஜமாக பழகுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதுமட்டுமல்லாமல் மனதில் பட்டதை தைரியத்துடன் நேருக்கு நேர் கூறும் லாஸ்லியாவின் அந்த குணமும் அனைவரையும் கவர்ந்தது. பிக்பாஸில் தனித்துவமான விளையாட்டின் மூலம் முன்னேறிக்கொண்டிருந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் கவினுடன் காதல் வலையில் வீழ்ந்தார். கவின் மற்றும் லாஸ்லியா காதல் கதை மிக சர்ச்சையாக அப்போது பேசப்பட்டது. இந்த காதலுக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ அதே அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது

திருமணம் செய்து கொள்வார்கள்
மிக விரைவிலேயே இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த வந்தவுடனேயே இருவரும் தனித்தனியாக தங்களது பாதைகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இப்பொழுது தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் கூட்டப்பா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
Recommended Video

செட் ஆகல பிரிஞ்சிட்டோம்
இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லாஸ்லியாவின் காதலை பெரிதாகக் கொண்டாடிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லாஸ்லியா அதில் கவினுக்கும் எனக்கும் செட் ஆகல பிரிஞ்சிட்டோம். என பிரேக்கப் குறித்து மிக ஓபனாக பேசியுள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











