தலைவனுக்குரிய அத்தனை தகுதியும் தல அஜீத்துக்கு இருக்கு - ஜூனியர் பாலையா பெருமிதம்
சென்னை: ஒரு தலைவனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் உடையவர், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் இருக்கும் அனைவரது அன்பையும், ஆதரவையும் பெற்ற ரியல் ஹீரோ அஜீத்குமார் தான் என்று ஜூனியர் பாலையா தெரிவித்துள்ளார்.
நம்ம தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்து, ஒரு பெண் நோ சொன்னால் அதன் அர்த்தம் நோ தான் எனும் கருவை மையமாக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த கதையின் கருவை உள்வாங்கி கொண்டு அதை பக்குவத்துடன், தயக்கமின்றி அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை தெளிவோடு சிறப்பாக வழங்கி இருக்கிறார் என்றார் அது மிகையல்ல.
அமராவதி படத்தில் தொடங்கிய அஜீத்தின் பயணம், இன்று மாஸ் ஹீரோவாகி, கதாநாயகனுக்கான வரையறைகளை உடைத்து ஸால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வரும் அஜீத்தின் திரையுலக வாழ்வில் இப்படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாகவே இருக்கும்.
இப்படத்தில் பெரும்பாலான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா. நாற்பது வருடங்களுக்கும் மேலாக துணை நடிகராக இத்திரையுலகில் நடித்து வருகிறார். அஜித் குமாரின் அறிமுக படமான அமராவதியில் இணைந்து நடித்த பிறகு இருவரும் சேர்ந்து நடித்த அடுத்த படம் நேர்கொண்ட பார்வை.
இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவம் பற்றி ஜூனியர் பாலையா பகிர்ந்து கொண்டார்.
அஜீத் எப்படி அறிமுகமான அமராவதி படத்தில் நடித்த போது பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டாரோ அதைப் போலவே, இன்றும் சிறிதளவு கூட மாற்றமின்றி பணிவுடன் அனைவரிடமும் நடந்து கொள்கிறார்.
அவருக்கு தல என்ற பெயரை ரசிகர்கள் கொடுத்ததில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் ஒரு தலைவனுக்குரிய அனைத்து பண்புகளையும் உடையவர். ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் அவரை தல என்று போற்றுகிறார்கள்.
இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் விலகாதபடி நடித்துள்ளார். அவரின் சண்டை காட்சிகளில் அதிரடி மாஸ் காட்டியுள்ளார். அவர் நடிக்கும் அந்த நீதிமன்ற காட்சிகள் படமாக்கப்படும் போது ஒரு அமைதியான சூழல் நிலவியது. தன்னை தானே மெருகேற்றி நடிக்கிறார்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் இருக்கும் அனைவரது அன்பையும், ஆதரவையும் பெற்ற ரியல் ஹீரோ நம் தல அஜித் குமார்.


Click it and Unblock the Notifications