twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய் பீம் வழக்கு.. சூர்யா மீது கடும் நடிவடிக்கை வேண்டாம்..சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    |

    சென்னை : ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் த.சா.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    ஒடுக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் காரணமாக நடக்கும் ஒடுக்குமுறைகளை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை தான் ஜெய்பீம்

    அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்...இப்போ யார் தெரியுமா? அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்...இப்போ யார் தெரியுமா?

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை செய்து, பாண்டிச்சேரி மாநில எல்லையில் வீசிவிட்டு செல்வதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், வன்னியர் சமூகத்தினர் கொதித்தெழுந்தனர்.

    சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

    சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

    வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைத்துள்ளதாக கூறப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுவிட்டது

    சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுவிட்டது

    இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்ற சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுவிட்டதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விசாரணை தள்ளிவைப்பு

    விசாரணை தள்ளிவைப்பு

    இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    There should not be any severe action on Suriya and Jai Bhim team. Madras High Court
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X