»   »  'தமிழர்களுக்கு திருவிழா எங்களுக்கு தெறி விழா'..விஜய்யைக் கொண்டாடும் ரசிகர்கள்

'தமிழர்களுக்கு திருவிழா எங்களுக்கு தெறி விழா'..விஜய்யைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், சமந்தா நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தெறி உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில், தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


விஜய்யின் காக்கிச்சட்டை, நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது? என்பதை இங்கே பார்க்கலாம்.


தெறி விழா

'இன்று தமிழர்களுக்கு திருவிழா எங்களுக்கு தெறி விழா' என்று ரைமிங்காக கூறியிருக்கிறார் ஜனா.


பாடல்

தெறி பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக நடனம் ஆடும் காட்சியை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்திக்.


மாரி

மாரி

மாரி படத்தில் தனுஷ் இறங்கிக் குத்துவது போல விஜய் ரசிகர்கள் 'ஜித்து ஜில்லாடி' பாடலுக்கு ஆடுகிறார்களாம்.


மொட்டை ராஜேந்திரன்

காமெடி, செண்டிமெண்ட் இரண்டிலும் மொட்டை ராஜெந்திரன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என பாராட்டி இருக்கிறார் தேவா.


குழந்தை வளர்ப்பு

'குழந்தை வளர்ப்பு அன்னைக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் பொருந்தும்' என்று படத்தின் கதையைத் தெரிவித்திருக்கிறார் ரஸ்ஸல்.


இதுபோன்ற மேலும் பல ட்வீட்டுகளால் #Theri, #TheriNewYear போன்ற ஹெஷ்டேக்குகள் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டடித்து வருகின்றன.


மொத்தத்தில் இன்று வெளியாகியிருக்கும் தெறி தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
English summary
Vijay, Samantha Starrer Theri Released Today Worldwide - Audience Live Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil