ஹீரோயின்லாம் ஓரம் போங்க.. ஜித்து ஜில்லாடியாக போஸ் கொடுத்த மனோபாலா.. தெறி டிசைனரின் கை வண்ணம்!

சென்னை: ஹீரோயின்களுக்கு எப்பவுமே போட்டியாக போட்டோஷூட் நடத்தி போடுவதில் மனோபாலா வேற லெவல்.

அதிலும், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்தால், என்ன கமல் சார் நீங்களா? எனக் கேட்கும் அளவுக்கு அப்படியொரு ஹேண்ட்ஸம் ஆக இருக்கிறார்.

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் தெறி படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் தான் என்ற ரகசியம் வெளியாகி உள்ளது.

சூப்பர்ஸ்டார் இயக்குநர்

சூப்பர்ஸ்டார் இயக்குநர்

மனோபாலாவை இந்த ஜெனரேஷன் ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகராக தெரியும். ஆனால், 1982ம் ஆண்டு வெளியான நடிகர் கார்த்தியின் ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் இவர். அதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் படத்தை இயக்கியவரும் இவர் தான். விஜயகாந்த், சிவாஜி, ஜெயராம் என பல ஜாம்பவான்களையும் இவர் இயக்கி உள்ளார்.

நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர்

66 வயதாகும் மனோபாலா சமீப காலமாக நகைச்சுவை நடிகராக கலக்கோ கலக்குவென கலக்கி வருகிறார். இளம் நடிகர்களுக்கு போட்டியாக ஷார்ட்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு ஊசி உடம்பை வைத்துக் கொண்டு, ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வருகிறார். சந்தானம், சிவா எல்லாம் அவரை வேற லெவலில் ஓட்டி கல்லா கட்டி வருகின்றனர்.

புது லுக் எப்படி?

புது லுக் எப்படி?

நடிகைகளுக்கு போட்டியாக அவ்வப்போது படுக்கையறை போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் போல தக தகவென ஜொலிப்பது போல மஞ்சள் நிற ஓவர் கோட்டுடன் வெள்ளை நிற உடையில் படு ஸ்டைலாக இருக்கும் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை போட்டு, புது லுக் எப்படி இருக்கு என கேட்டுள்ளார்.

நாங்களும் டஃப் கொடுப்போம்ல

நாங்களும் டஃப் கொடுப்போம்ல

அந்த போட்டோஷூட்டில் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளைச்சு வளைச்சு பலவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார் நடிகர் மனோபாலா. மேலும், அதற்கு கேப்ஷனாக நாங்களும் டஃப் கொடுப்போம்ல என்றும், இது எப்படி இருக்கு? என்றும் போட்டு இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறார்.

அந்த சேரா இந்த சேரா

அந்த சேரா இந்த சேரா

சீரியல் நடிகை ஷிவானி சமீபத்தில் சேரில் அமர்ந்தபடி செக்ஸியாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த சேர் சூப்பரா? மனோபாலாவின் இந்த சேர் போட்டோ சூப்பரா என ரசிகர்கள் கம்பேர் பண்ணி செம ரகளை செய்து வருகின்றனர். மேலும், மனோபாலாவின் இந்த அதிரடி மாற்றத்துக்கும் காரணம் யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

தெறி காஸ்ட்யூம் டிசைனர்

தெறி காஸ்ட்யூம் டிசைனர்

தளபதி விஜய் ஜித்து ஜில்லாடி பாட்டில் வந்த மாதிரியே இந்த லுக் இருக்கா? என்று பாருங்கள்.. ஆம் நீங்க கணித்தது சரிதான்.. தெறி படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்த என்.ஜே. சத்யா தான் இந்த சூப்பர் ஸ்டைலான லுக்கிற்கு சொந்தக்காரர். பிரஷுன் பிரஷாந்த் புகைப்படங்களை எடுத்துத் தள்ளி உள்ளார். Vurve Salon மேக்கப் போட்டிருக்காம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X