’தெறி’ பட நடிகர் ஜெயசீலன் காலமானார்.. இந்த வயசுலயே இப்படியொரு பிரச்சனையா.. கதறியழுத உறவினர்கள்
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் "ட்விங்கிளு ட்விங்கிளு சூப்பர் ஸ்டாரு.. அவ்வையார்.. வாத்தியார்" என தப்புத் தப்பாக ரைம்ஸ் பாடி காமெடி செய்யும் அடியாளாக நடித்த நடிகர் ஜெயசீலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களை மட்டுமே ரசிகர்களுக்கு அதிகளவில் தெரிந்திருக்கும். மிகப்பெரிய படங்களில் மிகப்பெரிய சாகசங்களை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களை கூட பலருக்கும் தெரியாது.

ஒரு சில காமெடி காட்சிகளில் நடித்தால் கூட ரசிகர்களுக்கு அந்த நடிகர்கள் பரீட்சையமாகிவிடுவார்கள். அப்படியொருவர் தான் நடிகர் ஜெயசீலன். தனது உருவத்தை வைத்தே சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது அவரது உறவினர்களையும் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஜெயசீலன் காலமானார்: தனுஷின் புதுபேட்டை, விஜய்யின் தெறி, விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.

தெறி சீன் மூலம் பிரபலம்: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தில் பள்ளியில் ரவுடிகள் சரக்கடித்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சியில் அவர்களை நடிகர் விஜய் உள்ளே வந்து பாடம் எடுப்பது போல வாத்தி ரெய்டு நடத்தி அடித்து விரட்டும் காட்சியில் நடிகர் ஜெயசீலன் "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" ரைம்ஸ் பாடுவதற்கு பதிலாக காமெடியாக வசனத்தை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.
விஜய் சேதுபதியுடன் நெருக்கம்: புதுப்பேட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெயசீலன் நடிகர் விஜய் சேதுபதியுடன் நெருக்கமான நட்புடன் பழகி வந்தார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

உடல்நலக்குறைவு: 40 வயதுதான் ஜெயசீலனுக்கு ஆகிறது. மஞ்சள்காமாலை நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர் அதற்குள் உடல்நலக்குறைவு காரணமாக உயிர் பிரியும் என யாருமே நினைத்து பார்க்கவில்லை என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுகின்றனர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணமே செய்யாமல் சினிமாவில் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த ஜெயசீலனின் மறைவு அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











