என்ன கொடுமை இது.. மூத்த நடிகர் "தெறி" செல்லத்துரை காலமானார்… 84 வயது!
சென்னை : தெறி படத்தில் நடித்த மூத்த நடிகர் செல்லத்துரை நேற்று அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
Recommended Video
சுயநினைவு இன்றி மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அன்னாரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.

காலமானார்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லத்துரை. சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் உயிரிழந்துள்ளார்.

முக்கியமான கதாபாத்திரம்
விஜய்யுடன் இவர் தெறி திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் முக்கியமானதாகும். இந்த படத்திற்கே பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இவரின் வசனம் அந்த படத்தில் அமைந்து இருக்கும். தெறி படத்திற்கே இந்த வசனம் பிளஸாக அமைந்தது என்று கூறலாம்.

அதிர்ச்சி
தனுஷூன் மாரி படத்திலும், உதயநிதி ஸ்டாலுடன் மனிதன், ராஜா ராணி, நட்பே துணை ஆகிய படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் செல்லத்துரை. இவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்தடுத்த மரணங்கள்
கடந்த 17ம் தேதி தான் சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா உயிரிழந்தார். நேற்று மாலை மூத்த நடிகர் செல்லதுரை இறந்திருக்கிறார். இன்று அதிகாலை 3 மணிக்கு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அடுத்தடுத்து திரைத்துறையின் இழப்பால் தமிழ் திரைத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











